'கில்லிங் வீரப்பன்' படத்திற்கு தடை விதிக்க முடியாது... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

By Manjula

சென்னை: ராம் கோபால் வர்மாவின் கில்லிங் வீரப்பன் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.

தமிழக காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கில்லிங் வீரப்பன் என்ற படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இயக்குநர் ராம் கோபால் வர்மா உருவாக்கி இருக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கின் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

கில்லிங் வீரப்பன்

கில்லிங் வீரப்பன்

தமிழக காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கில்லிங் வீரப்பன் என்ற படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இயக்குநர் ராம் கோபால் வர்மா உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சிவராஜ் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். வரும் புத்தாண்டு அன்று நாடு முழுவதும் கில்லிங் வீரப்பன் வெளியாகும் என்று படக்குழுவினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

வீரப்பன் மற்றும் முத்துலட்சுமி

வீரப்பன் மற்றும் முத்துலட்சுமி

கில்லிங் வீரப்பன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சேலம் மாவட்டம் சாமிநாயக்கன் பட்டியை அடுத்த பெருமாள் கோவிலைச் சேர்ந்த பா.பன்னீர் செல்வி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார். தனது மனுவில் 'சந்தனக் கடத்தல் வீரப்பன்' மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமியை இந்தப் படம் தவறாக சித்தரிக்கிறது. இந்தப் படத்தில் தமிழக போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

தடை விதிக்க

தடை விதிக்க

கில்லிங் வீரப்பன் வருகின்ற புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர். வீரப்பனைப் பற்றிய தவறான தகவல்களுடன் இந்தப்படம் வெளியானால் நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் பா.பன்னீர்செல்வி தெரிவித்து இருந்தார்.

தடை விதிக்க மறுப்பு

தடை விதிக்க மறுப்பு

இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கில்லிங் வீரப்பன் படத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டார். இதனால் தற்போது திட்டமிட்டபடி கில்லிங் வீரப்பன் நாடு முழுவதும் வருகின்ற புத்தாண்டு அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X