ப்பா. கருப்பு கலர் பிகினியில் கிம் கர்தாஷியன் உற்சாக குளியல்.. சம்மரை சூடாக்கும் ஹாட் போட்டோஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கீப்பிங் அப் வித் கர்தாஷியன் தொடர் மூலம் உலகளவில் பிரபலமானவர் கிம் கர்தாஷியன்.
அமெரிக்க மாடல் அழகியான இவர் பல நூறு கோடி சொத்துக்கு சொந்தக்காரியாகவும், தொழிலதிபராகவும் திகழ்கிறார்.
கணவரை விவாகரத்து செய்ய வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தனது மகள்களுடன் இந்த கோடையை கொண்டாடி வருகிறார் கிம் கர்தாஷியன்.

ஆபாச வீடியோ
2003ம் ஆண்டு வெளியான தி சிம்பிள் லைஃப் எனும் அமெரிக்க டிவி தொடர் மூலம் அறிமுகமானவர் கிம் கர்தாஷியன். 2007ம் ஆண்டு கிம் கர்தாஷியன் சூப்பர்ஸ்டார் எனும் ஆபாச வீடியோவில் நடித்து உலகளவில் பிரபலமானார் கிம் கர்தாஷியன். பின்னர் கீப்பிங் அப் வித் கர்தாஷியன் எனும் டிவி தொடரில் நடித்து டிவி நடிகையாக மாறிவிட்டார்.

ஹீரோயினாக
2008ம் ஆண்டு வெளியான டிசாஸ்டர் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் கிம் கர்தாஷியன். தொடர்ந்து, டீப் இன் தி வேலே, டெம்ப்டேஷன், ஓஷன் 8, மேரி மி, பா பேட்ரோல் : தி மூவி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் கிம் கர்தாஷியன். சில டிவி தொடர்களை தயாரித்து தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார் கிம் கர்தாஷியன்.

3 முறை விவாகரத்து
2000ம் ஆண்டு டேமன் தாம்சன் எனும் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்ட கிம் கர்தாஷியன் 2004ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு 2011ம் ஆண்டு கிறிஸ் ஹம்ப்ரீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட கிம் கர்தாஷியன் 2013ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்து விட்டார். இறுதியாக பிரபல அமெரிக்க பாடகர் கன்யே வெஸ்ட்டை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கிம் கர்தாஷியன் அவரையும் விவாகரத்து செய்ய வழக்கு தொடர்ந்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து நடக்கும் என தெரிகிறது.

கருப்பு பிகினியில்
கோடை விடுமுறையை தனது மகள்களுடன் கொண்டாடி வரும் கிம் கர்தாஷியன் கருப்பு நிற பிகினி அணிந்து குளத்தில் குளிக்கும் போட்டோக்களை பதிவிட்டு, இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார். 200 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள சூப்பர் மாடலான இவர் பதிவிடும் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் பல லட்சம் சம்பளமாக கிடைக்கிறதாம்.

உற்சாக குளியல்
நீச்சல் குளத்தில் குளிக்காமல், இயற்கை எழில் கொஞ்சும் காடுகளுக்கு நடுவே இருக்கும் குளம் ஒன்றில் உற்சாக குளியலை போட்டுள்ளார் கிம் கர்தாஷியன். அவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்களுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











