கண்ணீர் விட்டு கதறிய கிம் கர்தாஷியன்.. மீண்டும் கணவருடன் சேர்ந்தாச்சு.. வைரலாகும் புகைப்படங்கள்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச மாடல் அழகியும் ரியாலிட்டி ஸ்டாருமான கிம் கர்தாஷியன், கண்ணீர் விட்டு கதறி அழும் புகைப்படங்கள் உலகளவில் வைரலாகி வருகின்றன.
அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக கிம் கர்தாஷியனின் கணவரும் பிரபல ராப் பாடகருமான கன்யே வெஸ்ட் அறிவித்திருந்த நிலையில், இந்த நட்சத்திர தம்பதி குடும்பத்தில் பிரச்சனை கிளம்பியது.
சமீபத்தில், குடும்பத்தின் தனிப்பட்ட விஷயங்களை பொது வெளியில் கன்யே கூறிய நிலையில், இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது.

விவாகரத்து வதந்தி
தன்னை மருத்துவருடன் தனி அறையில் பூட்டி வைக்கப் பார்க்கிறார் தனது மனைவி கிம் கர்தாஷியன் என ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட் பகிரங்கமாக போட்ட ட்விட்டுகளும், அதற்கு பிறகு டெலிட் செய்யப்பட்ட ட்வீட்டுகளும் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. கன்யே மற்றும் கிம் விரைவில் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக வதந்தியும் வைரலாக பரவின.

கருவிலே சிதைக்க
மேலும், தனது மகள் 'நார்த்'தை கருவிலேயே தான் கொலை செய்ய சொன்னதாகவும், மனைவி கிம் கர்தாஷியன் அதற்கு அனுமதிக்கவில்லை என்றும், தனது வாழ்வின் வெற்றிக்கு கிம் கர்தாஷியன் மிகவும் தடையாக இருக்கிறார் போன்ற தேவையற்ற வசனங்களை சமீபத்தில் அவர் நடத்திய பிரச்சாரத்தின் போது கன்யே பேசியிருந்தது பூகம்பத்தை கிளப்பியது.

பைபோலார் டிசார்டர்
பிரச்சனைகளை கை மீறி போன நிலையில், இது தொடர்பாக பொது அறிக்கை வெளியிட்ட மாடல் அழகி கிம் கர்தாஷியன், தனது கணவர் கன்யே வெஸ்டுக்கு பைபோலார் டிசார்டர் நோய் இருப்பதாகவும், அவரது மனநலம் சற்றே பாதிக்கப்பட்டு இருந்ததால், அப்படியெல்லாம் பேசி விட்டார், அதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். கன்யே வெஸ்ட்டும் பொதுமக்கள் முன்பாக கிம் கர்தாஷியனிடம் மன்னிப்பு கோரினார்.

கண்ணீர் விட்டு கதறிய கிம்
தெற்கு கரோலினாவில் கன்யே வெஸ்ட் நடத்திய பிரச்சார கூட்டத்திற்கு பிறகு, தற்போது மீண்டும் கிம் கர்தாஷியன் மற்றும் கன்யே வெஸ்ட் ஒருவரை ஒருவர் சந்தித்து, ஒன்றாக இணைந்துள்ளனர். இந்நிலையில், காரில் செல்லும் போது, இருவரும் உணர்ச்சி பூர்வமாக பேசிக் கொண்டிருந்த நிலையில், கிம் கர்தாஷியன் கண்ணீர் சிந்திய காட்சியை மீடியாவினர் போட்டோக்களாக எடுத்தனர். தற்போது அது சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











