»   »  தினமும் 25 வாட்டி "சேர்ந்தது" வீணாகவில்லை: கிம் 2வது முறை கர்ப்பம்

தினமும் 25 வாட்டி "சேர்ந்தது" வீணாகவில்லை: கிம் 2வது முறை கர்ப்பம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியன் இரண்டாவது முறை கர்ப்பமாக உள்ளார்.

இப்போ கிம் கர்தாஷியன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பது ரொம்ப முக்கியமான செய்தியாக்கும் என்று நீங்கள் நினைத்தால் தலையெழுத்து ஆமாம் என்று கூற வேண்டியுள்ளது. அதற்கான காரணத்தையும் தெரிவித்து விடுகிறோம். கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.

கீப் அப் வித் தி கர்தாஷியன்ஸ் என்ற அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோவில் கிம் கர்தாஷியன்(34), அவரது சகோதரிகள், தாய் என்று குடும்பத்தோடு நடித்து வருகிறார்கள். டிவியில் அவர்கள் செய்யும் அலப்பறையை பார்க்க ஒரு கூட்டமே உள்ளது.

நார்த்

நார்த்

கிம் பிரபல பாடகர் கான்யே வெஸ்ட்டை காதலித்து கர்ப்பமானார். இதையடுத்து அவர் நார்த் வெஸ்ட் என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பிறகு கிம்மும், கான்யேவும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்த குழந்தை விரைவில் தனது 2வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது.

குழந்தை

குழந்தை

நார்த் வெஸ்டுக்கு தம்பி அல்லது தங்கச்சி பாப்பாவை அளித்தே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் கிம். இதையடுத்து கர்ப்பமாவதையே முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டார்.

25 முறை

25 முறை

இரண்டாவது முறை கர்ப்பமாக விரும்பிய கிம் தனது கணவருடன் தினமும் 25 முறை உடலுறவு கொண்டார். இதை அவரே பெருமையாக அனைவரிடமும் தெரிவித்தார். அப்படியும் கர்ப்பமாகாததால் மருத்துவரை சந்தித்து விளக்கம் கேட்டார்.

ஓவர்

ஓவர்

கர்ப்பமாவதற்காக நீங்கள் ஓவராக செக்ஸ் வைத்துக் கொள்கிறீர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் கிம்மின் கருப்பையில் பிரச்சனை இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்து அதை சரி செய்தனர்.

கர்ப்பம்

கர்ப்பம்

ஒரு வகையாக முட்டி மோதி கிம் இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். இதை அவர் கீப் அப் வித் தி கர்தாஷியன்ஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார். அவருக்கு அவரின் தாய் கிறிஸ் ஜென்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

English summary
American TV reality show star Kim Kardashian is pregnant for the second time. She announced this in the TV show that features her family.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil