நான்காவது காதலருடன் நச்சென லிப் லாக்.. காட்டுத் தீயாய் பரவும் கிம் கர்தாஷியனின் முத்தக் காட்சிகள்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: மூன்றாவது கணவரான கன்யே வெஸ்ட்டை பிரிந்த நிலையில், காரில் கண்ணீர் சிந்திய கிம் கர்தாஷியன் புகைப்படங்கள் டிரெண்டானதை விட அதிகளவில் தற்போது நான்காவது காதலருடன் அவர் பொதுவெளியில் லிப் லாக் அடித்த புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

கன்யே வெஸ்ட் போல ஒரு காதலர் இல்லை என உருகி வந்த கிம் கர்தாஷியன் தன்னை விட இளையவரான பீட் டேவிட்ஸன் உடன் தற்போது உல்லாசமாக டேட்டிங் செய்து வருவது அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சீக்கிரமே பீட் உடன் கிம் கர்தாஷியன் திருமணம் செய்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

30 கோடி ரசிகர்கள்

30 கோடி ரசிகர்கள்

30 கோடிக்கும் அதிகமான ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டு உலகளவில் பிரபலமான சூப்பர் மாடலாக திகழ்ந்து வருகிறார் கிம் கர்தாஷியன். அமெரிக்காவின் பில்லியனியர் பட்டியலில் இடம்பிடித்துள்ள கிம் கர்தாஷியன் KKW பியூட்டி எனும் அழகு சாதன நிறுவனத்தையும் SKIMS எனும் உள்ளாடை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

கழண்டு விழுந்த உள்ளாடை

கழண்டு விழுந்த உள்ளாடை

சமீபத்தில் தனது உள்ளாடை நிறுவனமான ஸ்கிம்ஸ் நிறுவனத்தின் விளம்பர போட்டோஷூட்டுக்காக மினி பிராவை அணிந்து கொண்டு போட்டோஷூட் நிகழ்த்திய நிலையில், அது எதிர்பாராமல் கழண்டு விழுந்ததில் ரொம்பவே அசிங்கப்பட்டார் கிம் கர்தாஷியன். அதற்காக தனது ரசிகர்களிடத்திலும் அவர் மன்னிப்பு கேட்டார்.

3வது கணவர்

3வது கணவர்

டாமன் தாமஸ் மற்றும் க்ரிஸ் ஹம்ப்ரீஸ் உடன் விவாகரத்து நடந்த நிலையில், பிரபல அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்ட்டை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கிம் கர்தாஷியன் சமீபத்தில் அவரை விவாகரத்து செய்தார். காதல் கணவரான கிம் கர்தாஷியன் உடன் 4 மகள்களை பெற்றுக் கொண்ட கிம் கர்தாஷியன் தற்போது புதிய காதலருடன் டேட்டிங் சென்று வருகிறார்.

4வது காதலருடன் டேட்டிங்

4வது காதலருடன் டேட்டிங்

கிம் கர்தாஷியன் மற்றும் பீட் டேவிட்சன் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் நடந்த மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் தனது காதலருடன் சென்று ரெட் கார்ப்பெட்டில் நடந்து தனது காதலை உறுதிப்படுத்தினார் கிம் கர்தாஷியன்.

லிப் லாக்

லிப் லாக்

இந்நிலையில், கிம் கர்தாஷியன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட 2 வீடியோக்களில் பீட் டேவிட்சன் உடன் லிப் லாக் முத்தம் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியாக இருந்தது. கூடிய விரைவிலேயே இருவரும் திருமணத்துக்கு தயாராகி வருகின்றனர் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் 4வது திருமணத்தை பீட் டேவிட்சன் உடன் கிம் கர்தாஷியன் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X