நூறு கோடி அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரி.. ஆனால், சரியா சம்பளம் தரலைன்னு பணியாளர்கள் வழக்கு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பில்லினியர் கிம் கர்தாஷியன் தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
மேலும், சர்வதேச மாடலான கிம் கர்தாஷியன் மீது இந்த விவகாரம் தொடர்பாக 7 பணியாளர்கள் திங்களன்று வழக்கு தொடர்ந்துள்ளது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
அதுமட்டுமின்றி, பணியாளர்களை மோசமாக நடத்தியதாகவும், அதிக நேரம் வேலை கொடுத்ததாகவும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டுள்ளன.

நூறு கோடி சொத்து
நூறு கோடி அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரியாக திகழ்கிறார் டிவி ரியாலிட்டி ஸ்டார் நடிகை கிம் கர்தாஷியன். சர்வதேச மாடல் அழகியான இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 223 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். உள்ளாடை நிறுவனம், அழகு சாதன பொருட்கள் விற்பனை என தொழில்துறையிலும் கொடிகட்டிப் பறக்கிறார்.

கணவருடன் விவாகரத்து
பிரபல அமெரிக்க இசை ராப் பாடகர் கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்துள்ள நிலையில், அதன் மூலமாகவும் ஜீவனாம்சமாக பல நூறு கோடிகள் இவருக்கு சொத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதே போல இரு முறை முன்னாள் கணவர்களை விவாகரத்து செய்து சொத்து சேர்த்துள்ளார் கிம் கர்தாஷியன்.

ஊழியர்கள் வழக்கு
இந்நிலையில், கிம் கர்தாஷியன் தங்களுக்கு வழங்கிய சம்பளத்தில் 10 சதவீதம் பணத்தை வரி செலுத்துவதாகக் கூறி பிடித்தம் செய்து கொண்டார் என்றும், ஆனால், அந்த பணத்தை இதுவரை அரசுக்கு செலுத்தவே இல்லை என்றும் அவரது வீட்டில் வேலை செய்த முன்னாள் பணியாளர்கள் 7 பேர் புகார் அளித்து வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

மோசமாக நடத்தினார்
மேலும், 16 வயதே ஆன பணியாளர் ஒருவருக்கு தொடர்ந்து 48 மணி நேரம் எந்தவொரு ஓய்வும் கொடுக்காமல் வேலை வாங்கி கொடுமைப்படுத்தினார் என்றும், ஊழியர்கள் அனைவருக்கும் முறையான உணவு இடைவேளை கூட வழங்கியது இல்லை என்றும், ஓவர் டைம் செய்ய வைத்தால், அதற்கான ஊதியத்தை ஒரு முறை கூட வழங்கியது இல்லை என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளனர்.
Recommended Video

அவருக்கு சம்மந்தமில்லை
இந்த கொடுமைகளை அவரது பார்வைக்கு கொண்ட சென்றதும் எங்களை பணியில் இருந்து நீக்கிவிட்டார் என்றும் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால், இதுதொடர்பாக கிம் கர்தாஷியனின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த ஊழியர்கள் யாரையும் கிம் கர்தாஷியன் நேரடியாக நியமிக்கவில்லை என்றும், இடைத் தரகர்கள் மூலமாகத்தான் பணியமர்த்தப்பட்டனர் என்றும் இந்த பிரச்சனைக்கும் கிம் கர்தாஷியனுக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











