லம்போர்கினி காருக்கே டிரெஸ் தச்சுப் போட்ட கிம் கர்தாஷியன்.. இன்னும் 6 கலர்ல ரிலீஸ் ஆகப் போகுதாம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கோடீஸ்வர மாடல் அழகி கிம் கர்தாஷியன் தனது காஸ்ட்லியான லம்போர்கினி காருக்கு கவர்ச்சியாக ஸ்கிம்ஸ் உடையை அணிவித்து உள்ளார்.
கீப்பிங் அப் வித் கர்தாஷியன் டிவி தொடர் மூலம் பிரபலமானவர் கிம் கர்தாஷியன்.
ஸ்கிம்ஸ் உள்ளாடை நிறுவனத்தை நடத்தி வரும் கிம் கர்தாஷியனின் இந்த அதிரடியாக லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து உலகளவில் பல பிரபலங்களும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

விவாகரத்தும் காதலும்
பிரபல அமெரிக்க ராப் இசை பாடகரை திருமணம் செய்து கொண்ட கிம் கர்தாஷியன் சமீபத்தில் கணவரை விவாகரத்து செய்து கொண்டார். ஆனால், சில நாட்களுக்கு முன்னதாக கொண்டாடப்பட்ட கன்யே வெஸ்ட்டின் பிறந்தநாளின் போது வாழ்நாள் முழுவதும் உங்களையே காதலித்துக் கொண்டு இருப்பேன் என கிம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மிரர் செல்ஃபி
உலகளவில் 227 மில்லியன் அதாவது 22 கோடி ரசிகர்களை கொண்டுள்ள கிம் கர்தாஷியன் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களும் கண்ணாடி செல்ஃபி போட்டோக்களும் பல மில்லியன் லைக்குகளையும் பல ஆயிரம் டாலர்களையும் சம்பாதித்து வருகின்றன.

லம்போர்கினிக்கு ஆடை
கிம் கர்தாஷியனே எப்போதுமே கண்களை கவரும் பிகினியில் தான் தரிசனம் கொடுப்பார். இந்நிலையில், அவரது காஸ்ட்லியான லம்போர்கினி காருக்கு தனது உள்ளாடை நிறுவனமான ஸ்கிம்ஸின் ஆடையை அணிவித்து அதகளம் செய்துள்ளார். முழுதாக மூடிய பஞ்சு போன்ற துணியுடன் கார் பார்க்கவே அழகாக உள்ளது.

காரும் கிம்மும்
காரை பார்ப்பதா? கிம் கர்தாஷியனை பார்ப்பதா என்றே தெரியாத அளவுக்கு இரண்டுமே ஒன்றாக இருப்பது போல ஒரே மாதிரியான உடையில் காருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு 5 மில்லியன் லைக்குகளை அள்ளி உள்ளார்.

6 கலரில்
மேலும், இதே போல 6 கலரில் கார்களுக்கான ஆடை தயாராகி இருப்பதாக பதிவிட்டுள்ள கிம் கர்தாஷியன் வரும் திங்கள் முதல் அவை விற்பனைக்கு வரவுள்ளதாகவும், விருப்பமுள்ள பணக்காரர்கள் ஸ்கிம்ஸ் உடையை வாங்கி தங்கள் கார்களுக்கும் அணிவிக்கலாம் என மல்டி நேஷனல் மார்கெட்டிங் வேலையை செய்துள்ளார் கிம் கர்தாஷியன்.

ராய் லக்ஷ்மி லைக்ஸ்
கிம் கர்தாஷியனின் இந்த புதிய கிரேஸி தனத்தை பார்த்த உலக பிரபலங்கள் லைக்குகளை அள்ளி குவித்து தங்களுக்கும் இந்த கார் உடை வேண்டும் என கமெண்ட் பக்கத்திலேயே புக்கிங்கை தொடங்கி விட்டனர். நம்ம ராய் லக்ஷ்மி உள்பட பல பாலிவுட் பிரபலங்களும் கிம் கர்தாஷியனின் இந்த போஸ்ட்டை லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











