கடலே சூடாகிடும் போல.. பிங்க் பிகினியில் போஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்.. குவியுது லைக்ஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச சூப்பர் மாடல் அழகியான கிம் கர்தாஷியன் கடற்கரையில் பிங்க் நிற பிகினி அணிந்து கொடுத்துள்ள ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை மெய் மறக்கச் செய்துள்ளது.
கவர்ச்சி கன்னியாகவும், தொழிலதிபராகவும் திகழும் கிம் கர்தாஷியனுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 187 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.
சமீபத்தில் தனது புதிய கிளை நிறுவனமான ஸ்கிம்ஸ் உள்ளாடை நிறுவன உடைகளை அறிமுகப்படுத்தி வைரலாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அழகின் உச்சம் நீயா
கடற்கரையில் பிங்க் நிற பிகினி அணிந்து கொண்டு, அழகின் உச்சமாக ஹாட்னஸை காட்டியபடி நடிகையும் மாடல் அழகியுமான கிம் கர்தாஷியன் ஷேர் செய்துள்ள புகைப்படங்கள் சர்வதேச அளவில் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறது. சுமார் 5.4 மில்லியன் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை லைக் செய்துள்ளனர்.

நாக்கை நீட்டி
மேலும், குறும்புத்தனமாக நடிகை கிம் கர்தாஷியன் தனது நாக்கை நீட்டியபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டும் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தும் வருகின்றனர். ஹாலிவுட் நடிகைகளில் இருந்து நம்ம ஊர் கோலிவுட் நடிகை இந்துஜா வரை அவரது புகைப்படங்களை லைக் செய்துள்ளனர்.

ஏகப்பட்ட உள்ளாடைகளுக்கு மத்தியில்
தொழிலதிபரான கிம் கர்தாஷியன் ஸ்கிம்ஸ் உள்ளாடை நிறுவனம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ளதை ஒட்டி ஒட்டுமொத்த உள்ளாடை கலெக்ஷன்களுக்கு மத்தியில், தானும் ஒரு உடலை ஒட்டியபடியான கவுனை அணிந்து நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

ஏரியில் விழுந்து
சமீபத்தில், தனது குடும்பத்துடன் ஏரி ஒன்றில் படகு சவாரி, நீர் சறுக்கு உள்ளிட்ட சாகசங்களை செய்த நடிகை கிம் கர்தாஷியன், அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தவறி விழுந்த வீடியோ ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருந்தது. நடிகை ஹன்சிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த வீடியோவை பார்த்து தங்களது ரியாக்ஷனை பதிவிட்டுள்ளனர்.

டிசைன் டிசைனா
மேன் ஃபிரெட் எனும் பிரபல ஃபேஷன் டிசைன் கலைஞரை பெருமைப் படுத்தும் விதமாக டிசைன் டிசைனான ஏகப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு பழைய நடிகைகள் போல போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களையும் தற்போது நடிகை கிம் கர்தாஷியன் பதிவிட்டு ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

அப்புறம் அந்த அமெரிக்க தேர்தல்
அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் கிம் கர்தாஷியனின் கணவரும் பிரபல ராப் இசை கலைஞருமான கன்யே வெஸ்ட் அறிவித்து இருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் கலந்து கொள்ளக் கூடாது என கிம் அவரிடம் வாக்குவாதம் செய்தது மிகப்பெரிய பஞ்சாயத்தை உருவாக்கியது. அதற்கு பிறகு கன்யே வெஸ்ட் அதிபர் தேர்தல் குறித்து வாயே திறக்காமல் மெளனி ஆகி உள்ளார். அடி பலமோ!


Click it and Unblock the Notifications











