நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கிம் கர்தாஷியன்.. ஆனால் அதில் ஒரு செம ட்விஸ்ட் இருக்கு!
பிங்க் பிகினியில் படுத்துக் கொண்டு போஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச சூப்பர் மாடல் அழகியான கிம் கர்தாஷியன் வெளியிட்டுள்ள நிர்வாண புகைப்படம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
கணவர் கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ள கர்தாஷியன் அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், தனது உள்ளாடை நிறுவனமான ஸ்கிம்ஸொம் புதிய டைட்ஸ் எனும் உடலை ஒட்டிய ஆடையை அறிமுகப்படுத்தி உள்ளார்.

பதற வைத்த கிம்
திடீரென தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆடை ஏதும் அணியாமல் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து அமர்ந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த உலக ரசிகர்களையும் பிரபலங்களையும் பதற வைத்துள்ளார் கிம் கர்தாஷியன்.

நிர்வாண ட்விஸ்ட்
ஆனால், அந்த போட்டோவுக்கு கேப்ஷனாக கிம் கர்தாஷியன் கொடுத்திருப்பதை படித்தால் தான் ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட் காத்திருக்கிறது. இடுப்புக்கு கீழே கிம் ஆடை ஏதும் அணியாமல் இல்லை. தனது ஸ்கிம்ஸ் நிறுவனத்தின் புதிய டைட்ஸ் ஆடையைத் தான் அணிந்து அப்படியொரு போஸ் கொடுத்திருக்கிறார் கிம் கர்தாஷியன்.

மேலாடை அணியாமல்
மேலாடை அணியாமல் இடுப்புக்கு கீழே போட்டிருக்கும் ஸ்கிம்ஸ் டைட்ஸ் ஆடையை விளம்பரப்படுத்தவே இப்படியொரு போஸ் கொடுத்து ரசிகர்களை பதற வைத்துள்ள சூப்பர் மாடல் கிம் கர்தாஷியன், தனது முன்னழகை கை வைத்து மறைத்தபடியே போஸ் கொடுத்துள்ளார்.

உள்ளாடை விளம்பரங்கள்
சமீபத்தில் தனது கர்தாஷியன் சகோதரிகளான கெண்டல் ஜென்னர், கைலி ஜென்னர் உடன் இணைந்து வித விதமான காதலர் தின ஸ்பெஷல் உள்ளாடைகளை அணிந்து கொண்டு நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கினார். இந்நிலையில், அடுத்த கட்டமாக ஸ்கிம்ஸ் டைட்ஸ் ஆடைகளை இப்படி அதிரடியாக அறிமுகப்படுத்தி உள்ளார்.

20 கோடி ரசிகர்கள்
உலகளவில் 207 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ளார் கிம் கர்தாஷியன். அவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படத்துக்கும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அவருக்கு சம்பளமாக பல கோடிகளை கொடுத்து வருகிறது. சுமார் 780 மில்லியன் டாலர்களுக்கும் மேல் சொத்துக்களை வைத்துள்ள கிம் கர்தாஷியன் கணவர் கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்தால், பில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்துக்களுக்கு சொந்தக்காரி ஆகிவிடுவார்.


Click it and Unblock the Notifications











