16 வயசுல நான் எப்படி இருந்தேன் தெரியுமா? டீனேஜ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கீப்பிங் அப் வித் கர்தாஷியன் நடிகை கிம் கர்தாஷியன் தனது 16 வயது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

40வயதிலும் கவர்ச்சி கன்னியாக 200 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ளார் இவர்.

அழகு சாதன பொருட்கள், உள்ளாடை நிறுவனம் என தொழிலதிபராகவும் திகழ்கிறார்.

209 மில்லியன் ஃபாலோயர்கள்

209 மில்லியன் ஃபாலோயர்கள்

நாளுக்கு நாள் கிம் கர்தாஷியனின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சமீபத்தில் தான் 207 மில்லியன் ரசிகர்கள் இருந்த நிலையில், தற்போது 209 மில்லியன் ஃபாலோயர்களை கடந்துள்ளார். உலகிலேயே அதிக ஃபாலோயர்களை கொண்டுள்ள சூப்பர் மாடல் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

3வது விவாகரத்து

3வது விவாகரத்து

40 வயதாகும் கிம் கர்தாஷியன் 4 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். ஏற்கனவே இரண்டு கணவர்களை விவாகரத்து செய்துள்ள இவர், தற்போது பிரபல அமெரிக்க ராப் இசை கலைஞரான கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்ய உள்ளார். கிம் கர்தாஷியனின் பேச்சை மீறி அமெரிக்க தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என கன்யே பேசியது தான் விரிசலுக்கு காரணம் என்கின்றனர்.

சம்மர் ஸ்பெஷல்

சம்மர் ஸ்பெஷல்

வெயில் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், தனது மகள் நார்த் உடன் சம்மரை கொண்டாட பீச் ரெசார்ட்டில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை சில தினங்களுக்கு முன்பு பதிவிட்டு வைரலாக்கினார் கிம் கர்தாஷியன். இன்ஸ்டாகிராமில் அந்த போட்டோக்களுக்கு 4.8 மில்லியன் லைக்குகள் குவிந்தன.

தேன் குளியல்

தேன் குளியல்

தலையில் தேன் தேய்த்தால் தலைமுடி வெள்ளையாக மாறிவிடும் என்பார்கள். ஆனால், தலையில் தேன் ஊற்றி குளிக்கும் புகைப்படங்களையும் சமீபத்தில் பதிவிட்டு தனது அழகு சாதன பொருட்களுக்காக விளம்பரப்படுத்தி வைரலாக்கினார். சுமார் 2 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்கள் பெரும் ஆச்சர்யத்தோடு அந்த போட்டோக்களை கண்டு ரசித்தனர்.

16 வயசு கிம்

16 வயசு கிம்

இளம் வயதில் இருந்தே மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் கிம் கர்தாஷியன், 16 வயதில் தான் எப்படி இருந்தேன் என்கிற புகைப்படத்தை தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். தீயாக பரவி வரும் இந்த புகைப்படத்திற்கு 2.8 மில்லியன் லைக்குகளும், ஏகப்பட்ட பிரபலங்களின் கமெண்ட்டுகளும் குவிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X