For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆத்தாடி.. நூறு கோடி அமெரிக்க டாலர்களாம்.. ஃபோர்ப்ஸ் பில்லினியர் பட்டியலில் இணைந்த கிம் கர்தாஷியன்!

  |

  லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க டிவி நடிகையும் சூப்பர் மாடலுமான கிம் கர்தாஷியன் ஃபோர்ப்ஸ் பில்லினியர் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

  கடந்த 2007ம் ஆண்டு கிம் கர்தாஷியன் சூப்பர்ஸ்டார் எனும் ஆபாச பட வீடியோவை வெளியிட்டு உலகளவில் பரபரப்பை கிளப்பியவர் இவர்.

  அந்த படம் வந்து 7 வருஷம் ஆச்சாம்.. படக்குழுவுக்கு நன்றி சொல்லி கொண்டாடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!அந்த படம் வந்து 7 வருஷம் ஆச்சாம்.. படக்குழுவுக்கு நன்றி சொல்லி கொண்டாடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

  அழகு சாதன பொருட்கள், உள்ளாடை நிறுவனம் மூலமாக கடந்த சில ஆண்டுகளில் 100 கோடி அமெரிக்க டாலர்களை சம்பாதித்து பில்லினியராக மாறியுள்ளார்.

  டிவி நடிகை

  டிவி நடிகை

  கீப்பிங் அப் வித் கர்தாஷியன்ஸ் எனும் டிவி தொடர் மூலம் உலகளவில் பிரபலமானார் நடிகை கிம் கர்தாஷியன். டிவி தொடர்களை தொடர்ந்து சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். டிசாஸ்டர், டீப் இன் தி வேலே, டெம்ப்டேஷன், ஓஷன் 8, மேரி மி, பா பேட்ரோல் : தி மூவி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

  சோஷியல் மீடியா குயின்

  சோஷியல் மீடியா குயின்

  கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் ட்விட்டரில் இணைந்த கிம் கர்தாஷியனை ட்விட்டரில் 69.7 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். உலகளவில் ஏகப்பட்ட பிரபலங்களும் இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 213 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

  பெண் தொழிலதிபர்

  பெண் தொழிலதிபர்

  டிவி நடிகை, சூப்பர் மாடல் என சர்வதேச புகழ் பெற்ற கிம் கர்தாஷியன், பெண் தொழிலதிபராகவும் கலக்கி வருகிறார். மொபைல் கேமிங் மூலம் முதன்முறையாக 51 மில்லியன் டாலர்களை ஈட்டி பலரது கவனத்தை ஈட்டிய கிம் கர்தாஷியன், கிம் கர்தாஷியன் வெஸ்ட் பியூட்டி எனும் அழகு சாதன நிறுவனத்தை தொடங்கி பல கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டினார்.

  கிம் பியூட்டி

  கிம் பியூட்டி

  KKW பியூட்டி என தனது பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அழகு சாதன நிறுவனத்தில் புதுவித லிப்ஸ்டிக் முதல் ஏகப்பட்ட மேக்கப் சாதனங்களை உருவாக்கி வியாபரம் செய்ததில் 500 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வருமானத்தை ஈட்டி அனைவரையும் ஆச்சர்யத்தோடு பார்க்க வைத்தார்.

  தாங்க்ஸ்கிவ்விங் கொண்டாடிய த்ரிஷா, பிரியங்கா மற்றும் பல திரை பிரபலங்கள்- வீடியோ
  ஸ்கிம்ஸ் உள்ளாடை

  ஸ்கிம்ஸ் உள்ளாடை

  அழகு சாதன துறையில் அசத்தி வந்த கிம் கர்தாஷியன் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஸ்கிம்ஸ் உள்ளாடை நிறுவனம் மூலமாக அடுத்த லெவலுக்கு உயர்ந்து விட்டார். உடலை ஒட்டியபடி இருக்கும் ஏகப்பட்ட உள்ளாடை ரகங்களை அறிமுகப்படுத்தி இரண்டே ஆண்டுகளில் சுமார் 225 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வருமானம் ஈட்டி உள்ளார்.

  கன்யே வெஸ்ட் உடன் விவாகரத்து

  கன்யே வெஸ்ட் உடன் விவாகரத்து

  டேமன் தாம்சன், கிறிஸ் ஹம்ப்ரீஸ் என ஏற்கனவே இரு நபர்களை திருமணம் செய்து விவாகரத்து செய்த இவர், கடைசியாக மிகவும் காதலித்து பிரபல அமெரிக்க பாடரான கன்யே வெஸ்ட்டை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற பிரச்சனைகள் காரணமாக கன்யே வெஸ்ட்டையும் விவாகரத்து செய்ய வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் மூலம் ஜீவனாம்சமாக ஒரு பெரிய தொகை கிம்முக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  பில்லினியர்

  பில்லினியர்

  ஃபோர்ப்ஸ் இதழ் தற்போது அதிகாரப்பூர்வமாக கிம் கர்தாஷியன் பில்லினியர் ஆகி உள்ளார் என அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை தனது குழந்தைகளுடன் தீவு ஒன்றில் கொண்டாடி வரும் கிம் கர்தாஷியன், உலகளவில் வெறும் 2755 பில்லினியர்களில் ஒருவராக மாறி சாதனை படைத்துள்ளார்.

  கேலி செய்து விமர்சனம்

  கேலி செய்து விமர்சனம்

  கவர்ச்சியை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டுகிறார் என நெடுங்காலமாக விமர்சிக்கப்பட்ட கிம் கர்தாஷியன், முதன் முதலாக ஃபோர்ப்ஸ் அட்டைப் படத்தில் இடம்பெற்ற போது, எந்தவொரு டேலன்ட்டும் இல்லாத பெண்ணுக்கு இந்த இடம் கிடைத்ததே போதும் என்று ட்வீட் போட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது நூறு கோடி அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரியாக மாறி தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார்.

  English summary
  Keeping up with Kardashian star Kim Kardashian turned officially as a Billionaire in Forbes list. She is now enjoying her summer vacation with her kids.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X