அப்போ அமெரிக்க அதிபர் கனவு? கன்யேவை இப்படி கலங்க விட்டுட்டாரே கிம் கர்தாஷியன்.. விவாகரத்தா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் அடுத்த அதிபர் நான் தான் என்றும், டிரம்புக்கு எதிராக போட்டியிட போகிறேன் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் கிம் கர்தாஷியனின் கணவரும் ராப் இசை பாடகருமான கன்யே வெஸ்ட்.

இசை கலைஞராகவும், தொழிலதிபராகவும் கலக்கி வரும் கன்யே வெஸ்ட், ஜாலியாக தனது வாழ்க்கையை கழித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது, கன்யே வெஸ்ட்டை அவரது மனைவி கிம் கர்தாஷியன் விவாகரத்து செய்யப் போவதாக அமெரிக்காவில் பரபரப்பு கிளம்பி இருக்கிறது.

சூப்பர் மாடல்

சூப்பர் மாடல்

சுமார் 180 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டு அகில உலக சூப்பர் மாடலாக திகழ்கிறார் கிம் கர்தாஷியன். அண்மையில், அவரது அழகு சாதன நிறுவனமும், பல நூறு கோடிகளை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்து இருந்தது. ரியாலிட்டி ஷோ நடிகையாக அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச ரசிகர்களையும் கவர்ந்தவர் கிம் கர்தாஷியன்.

அமெரிக்க ஜனாதிபதி கனவு

அமெரிக்க ஜனாதிபதி கனவு

மாடல் அழகி கிம் கர்தாஷியனின் கணவரும் அமெரிக்காவின் ராப் இசை பாடகராவும் திகழும் கன்யே வெஸ்ட், சமீபத்தில், அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, உலகளவில் கவனம் ஈர்த்தார். கன்யே வெஸ்ட் தனியாக தொழிலதிபராகவும் சாதித்தவர்.

விவாகரத்து

விவாகரத்து

இந்நிலையில், தற்போது நடிகை கிம் கர்தாஷியன் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், கெட் அவுட் படத்தில் வருவதை போல தன் வாழ்க்கை மாறி விட்டதாகவும் ஏகப்பட்ட ட்வீட்களை பதிவிட்டு சிலவற்றை டெலிட்டும் செய்துள்ளார். இவரது அமெரிக்க அதிபர் கனவு அறிவிப்பு பிடிக்காமல் தான் கிம் இவரை விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கருவிலே அழிக்க நினைத்தார்

கருவிலே அழிக்க நினைத்தார்

மேலும், சமீபத்தில் கன்யே வெஸ்ட்டுக்கும், கிம் கர்தாஷியனுக்கும் பிறந்த மூத்த மகள், 'நார்த்', கருவிலே தன் தந்தை தன்னை அழிக்க நினைத்ததாகவும், தாய் தான் தன்னை காப்பாற்றி இந்த உலகிற்கு கொண்டு வந்தார் என்றும் பதிவிட்டு இருந்தது அமெரிக்காவில் அதிர்வலையை கிளப்பியது. கன்யேவும் அதை ஒப்புக் கொண்டு புலம்பியதும் குறிப்பிடத்தக்கது.

நல்லாத்தான் இருக்கார்

நல்லாத்தான் இருக்கார்

கன்யே வெஸ்ட்டின் தொடர் பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் விரைவில் அவருக்கும் கிம் கர்தாஷியனுக்கும் விவாகரத்து நடக்கப் போகிறதா? என்றும், இவருக்கு மனநலம் பாதித்து விட்டது என்றும் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டனர். இந்நிலையில், வெஸ்ட்டின் நண்பரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், வெஸ்ட் நலமுடன் இருக்கிறார் என ட்வீட் போட்டுள்ளார். மேலும், கன்யே வெஸ்ட் தனது அடுத்த ஆல்பமான DONDA ஆல்பத்தை வரும் வெள்ளியன்று வெளியிட தீவிரமாகி வருகிறார். ஆனால், இது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் கிம் கர்தாஷியன் இதுவரை வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X