இப்படி வொர்க்கவுட் பண்ணா.. எல்லா பசங்களும் ஜிம்முக்கு வந்துடுவாங்களே.. இணையத்தை தெறிக்கவிடும் கிம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச சூப்பர் மாடலான கிம் கர்தாஷியன் நீச்சல் உடையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார்.
கணவர் கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்த கிம் கர்தாஷியன் தனது குழந்தைகளுடன் கோடை விடுமுறையை தீவு ஒன்றில் கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்நிலையில், மீண்டும் ஜிம்முக்கு சென்ற நிலையில், எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் கிம் கர்தாஷியன்.

218 மில்லியன் ரசிகர்கள்
சர்வதேச சூப்பர் மாடல், தொழிலதிபர், டிவி நடிகை என பன்முகத்தன்மை கொண்டவர் கிம் கர்தாஷியன். இன்ஸ்டாகிராமில் சுமார் 218 மில்லியன் ரசிகர்களை கொண்டு தனி சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார் கிம் கர்தாஷியன். உலகளவில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் இவருக்கு தீவிர ரசிகர்களாக உள்ளனர்.

கோடை விடுமுறை
கணவர் கன்யே வெஸ்டை விவாகரத்து செய்துள்ள நிலையில் நடிகை கிம் கர்தாஷியன் தனது குழந்தைகள் மற்றும் சகோதரிகளுடன் கோடை விடுமுறையை தீவு ஒன்றில் கழித்து வந்தார். பிகினி உடையில் குளிக்கும் படு சூடான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் பிபியை எகிற வைத்தார் கிம் கர்தாஷியன்.

ட்ரிப் போகாதீங்க
கோடை விடுமுறை உல்லாசமாக கழித்து விட்டு வீடு திரும்பிய கிம் கர்தாஷியன், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், "Don't trip" என பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நீங்க மட்டும் ஜாலியா ஊர் சுத்திட்டு எங்களை வெளியே போகக் கூடாதுன்னு சொல்வது என்ன நியாயம் என சில நெட்டிசன்கள் கிம்மின் சுற்றுலா போட்டோக்களை ஷேர் செய்து ட்ரோல் செய்தனர்.

கும்முன்னு ஜிம்மில்
ஜிம் உடையில் நடிகைகள் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களும் வீடியோக்களுமே சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் நிலையில், நீச்சல் உடை போன்ற ஜிம் சூட் அணிந்து கொண்டு நடிகை கிம் கர்தாஷியன் செம செக்ஸியாக வொர்க்கவுட் செய்யும் போட்டோவை பதிவிட்டு தனது ரசிகர்களை ஸ்தம்பிக்க செய்துள்ளார்.
Recommended Video

வெள்ளை முடி
40 வயதாகும் கிம் கர்தாஷியன் அடிக்கடி தனது கூந்தலுக்கு ஹேர் டை அடித்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதுவரை கருகருவென கூந்தல் இருந்த நிலையில், தற்போது வெள்ளை முடி போல லைட் பிரவுன் நிறத்தில் அவரது தலைமுடியை மாற்றிக் கொண்டிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











