twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பரியேறும் பெருமாள்.. 40 கிலோ ‘கிம்பல்’ உதவியுடன் முழுப்படத்தையும் எடுத்த ஒளிப்பதிவாளர்!

    பரியேறும் பெருமாள் படம் கிம்பல் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

    |

    சென்னை: பரியேறும் பெருமாள் திரைப்படம் முழுவதும் கிம்பல் எனும் அதி நவீன கேமராவால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

    பா இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் ,கயல் ஆனந்தி ,யோகிபாபு, லிஜிஸ் நடிக்கும் படம் பரியேறும் பெருமாள் . வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 28ம் தேதிப்படம் வெளியாகிறது .

    இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.

    [நாம் எல்லோரும் நாயாக இருக்கவேண்டுமென நினைக்கிறோம்: பரியேறும் பெருமாள் இயக்குனர்]

    என் குரு:

    என் குரு:

    இது பற்றி அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில், "பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம் , முதல் படம் மாலை நேரத்து மயக்கம் . நான் பிறந்து வளர்ந்தது. சென்னைதான் எனக்கு அதிகமாக கிராமத்து வாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை. எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்க சொல்கிறது.

    வித்தியாசமான முயற்சி:

    வித்தியாசமான முயற்சி:

    எனக்கு சில எழுத்தாளர் நண்பர்கள் இருக்கிறார்கள். வாசிப்பு அனுபவமும் கொஞ்சம் உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் இயக்குனர் மாரிசெல்வராஜ் . பரியேறும் பெருமாள் கதையை கேட்டவுடன் இந்த கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கடவேண்டும் என்கிற எண்ணம் வந்தது.

    நெல்லை கதைக்களம்:

    நெல்லை கதைக்களம்:

    படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பகுதிகள் . அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள் , தெருக்கள் ,வெயில், மனிதர்கள் ,விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம் பிடிக்க வேணும். கூடவே ஒரு அழகியலும் இருக்கவேண்டும் என்கிற ஆசை. கதைக்களம் , அதன் வேகம் இதற்கு ஈடுகொடுக்க கிம்பல் எனும் தொழில் நுட்பத்தை முழுக்க முழுக்க படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன்.

    கிம்பல் உபகரணங்கள்:

    கிம்பல் உபகரணங்கள்:

    40கிலோ எடைகொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களை தோளில் சுமந்து கொண்டு முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும், படம் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. பட்ட சிரமத்திற்கு பலன்கிடைத்திருக்கிறது. கிராமத்து நிலமும் மக்களும் வாழ்வியலும் தினம் தினம் என்னை உற்சாகமூட்டியது.

    அழகான படம்:

    அழகான படம்:

    எந்த இடத்திலும் அந்த நிலத்தின் கலர் மாறாமல் அதை அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். மனிதர்களோடு விலங்குகளும் இந்த படத்தில் நடித்திருக்கின்றன அவற்றை படம்பிடிக்க கிம்பல் போன்ற உபகரணம் பெரிதும் உதவியது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான ஒரு படமாக வந்திருக்கிறது , திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும் , அழகையும் இந்த படத்தில் பெரிதும் எதிர் பார்க்கலாம்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    The Camera man of the upcoming Tamil movie Pariyerum Perumal says that he used kimbal for the entire film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X