கிங் காங் வைத்த கல்யாண விருந்து.. எத்தனை வெரைட்டி பாருங்க..படையெடுத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

சென்னை: நடிகர் கிங் காங்கின் மகள் கீர்த்தனாவின் திருமணம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். திருமணத்தில் கலந்துகொள்ளாத நடிகர்கள், நடிகைகளை விமர்சனம் செய்யவும் ரசிகர்கள் தவறவில்லை. இந்நிலையில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண விருந்தை வைத்திருக்கிறர் கிங் காங். இதிலும் சில பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

90களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான கிங் காங் வரிசையாக பல படங்களில் நடித்தார். மாற்று திறனாளியாக இருந்தாலும் தனது திறமையை வைத்து சரசரவென்று வளர்ந்த அவர்; தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். வடிவேலுவுடன் பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல படங்களில் காமெடி செய்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்.

மகளுக்கு திருமணம்: அவருக்கு கீர்த்தனா என்ற மகள் இருக்கிறார். அவர் நவீன் என்பவரை காதலிக்க; கிங் காங் அந்தக் காதலுக்கு பச்சை கொடி காண்பித்தார். அதும்ட்டுமின்றி தன்னுடைய மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கு பிளான் செய்த அவர்; தமிழ் திரையுலகம், கன்னட திரையுலகம் சார்ந்தவர்களுக்கு நேரில் சென்று பத்திரிகைகளை வைத்தார். அப்போது கிங் காங்தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

King Kong hosted a party for friends and relatives on the occasion of his daughter s wedding
Photo Credit:

சூப்பர் திருமணம், வரவேற்பு: கடந்த வாரத்தில் பெசன்ட் நகரில் இருக்கும் முருகன் கோயிலில் வைத்து கீர்த்தனா - நவீன் தம்பதிக்கு திருமணம் நடந்து முடிந்தது. அதனையடுத்து தனியார் மண்டபம் ஒன்றில் திருமண வரவேற்பும் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின், எம்.பி. திருமாவளவன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும், திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டார்கள்.

சிவகார்த்திகேயனின் வாழ்த்து: திருமணம் நடந்த அன்று சிவகார்த்திகேயனால் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே மறுநால் கிங் காங்கின் வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் மன்சூர் அலிகானும் வீட்டுக்கு சென்றார். மேலும் வடிவேலு கிங் காங்கை ஃபோனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதற்கும் முன்னதாக தனது மேனேஜரை தன்னுடைய சார்பில் திரும்ணத்துக்கு அனுப்பி வைத்திருந்தார். அதுமட்டுமின்றி ஒரு லட்சம் ரூபாயை வடிவேலுவின் மேனேஜர் கொடுத்தார் என்றும் கிங் காங் ஒரு பேட்டியில் கூறியிருந்தது கவனிக்கத்தக்காது.

திருமண விருந்து: இந்நிலையில் திருமணம் முடிந்ததை அடுத்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கல்யாண விருந்து வைத்திருக்கிறார் கிங் காங். அந்த விருந்தில் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் குழம்பு, நெத்திலி மீன் குழம்பு, நல்லி ரசம், வத்தல பாயாசம், ஐஸ் க்ரீம், பீடா உள்ளிட்டவைகள் பரிமாறப்பட்டன. மேலும் மீசை ராஜேந்திரன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த விருந்தில் கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X