twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடும்ப திரைக்கதைகளின் மன்னன்..வசனத்தில் சுவாரஸ்யம் காட்டிய இயக்குநர் விசு

    |

    சென்னை: நடிகர், நாடக ஆசிரியர், திரைக்கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர் என பன்முக திறமைக்கொண்டவர் விசு.

    பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் அந்த வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா என்கிற வசனம் மூலம் தமிழ் படங்களில் யார் என திரும்பி பார்க்க வைத்தவர் விசு.

    சம்சாரம் அது மின்சாரம் என்கிற இவரது படம் பான் இந்தியா படமாக பல மொழிகளில் பின்னர் தயாரிக்கப்பட்டது.

    ஏ.ஆர். ரஹ்மான் பணத்தை எல்லாம் எதிர்பார்க்கலைங்க.. இரவின் நிழல் மேஜிக்கை சொல்லும் பார்த்திபன்! ஏ.ஆர். ரஹ்மான் பணத்தை எல்லாம் எதிர்பார்க்கலைங்க.. இரவின் நிழல் மேஜிக்கை சொல்லும் பார்த்திபன்!

    ஆளுமைமிக்க கதாசிரியர்கள் வழியில் விசு

    ஆளுமைமிக்க கதாசிரியர்கள் வழியில் விசு

    தமிழ் திரைப்பட உலகில் இளங்கோவன், கருணாநிதி, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஜாவர் சீத்தாராமன், ஆரூர்தாஸ் போன்றோர் இருந்த காலகட்டத்தில் மேடை நாடகம் மூலம் மத்தியதர வர்க்கத்தை பிரதிபலிக்கும் பலர் திரைத்துறைக்கு வந்தனர். கே.பாலச்சந்தர், சோ போன்றோர் அதில் முன்னோடிகள் என்றால் விசு அதில் மூத்த மாணவன் எனலாம். ஒய்.ஜி.பார்த்தசாரதி நாடகம் மூலம் அறிமுகமான விசு பின்னர் கே.பாலச்சந்தர் மூலம் திரைத்துறைக்கு வந்தார்.

    பாலசந்தரின் வலது கரம், பல படங்களுக்கு கதைக்களம் விசு

    பாலசந்தரின் வலது கரம், பல படங்களுக்கு கதைக்களம் விசு

    தமிழ் திரைப்படங்களில் வலுவான கதை, வசனத்துக்கு முக்கியத்துவம், வலுவான காட்சி அமைப்பு, நகைச்சுவை கலந்து சொல்வது என்பதில் கே.பாலசந்தரின் வலதுகரமாக கதை, திரைக்கதையில் கலக்கினார் விசு. பாலச்சந்தரிடம் பயின்ற விசுவின் ஆரம்பக்கால கதைகள் பாலசந்தர் இயக்கத்தில் வெற்றிப்படங்களாக மாறியது. பட்டினப்பிரவேசம் (இதன் தெலுங்கு மொழியில் ரஜினிகாந்த் நடித்திருப்பார்), சதுரங்கம், அவன் அவள் அது, மழலைப்பட்டாளம், தில்லுமுல்லு, நெற்றிக்கண் போன்றவை விசுவின் ஆரம்பகால பேர் சொல்லும் திரைக்கதைகள்.

    அடையாளம் காட்டிய குடும்பம் ஒரு கதம்பம் ரோல்

    அடையாளம் காட்டிய குடும்பம் ஒரு கதம்பம் ரோல்

    குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் முதன் முதலாக வயதான சீனிவாச ராகவன் பாத்திரத்தில் விசு நடித்தார். அதன் கதைவசனமும் அவரே. இந்தப்படத்தில் விசு அடிக்கும் கூத்து பெரிய அளவில் விசுவுக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. இதன் பின்னர் நாடக கலைஞர் எஸ்.வி.சேகரை அறிமுகப்படுத்தி மணல் கயிறு படத்தை எடுத்தார். இதில் கதை,வசனம், இயக்கம் அனைத்தும் விசு. படத்தில் பல முடிச்சுகள் போட்டு கடைசியில் இவரே அதற்கு தீர்வும் காண்பார்.

    30 ஆண்டுகளுக்கும் மேல் பிசியாக தமிழ் மக்களோடு கலந்து

    30 ஆண்டுகளுக்கும் மேல் பிசியாக தமிழ் மக்களோடு கலந்து

    சிம்லா ஸ்பெஷல் என்கிற படம் நாடகத்தை மையமாக வைத்து வந்தது, அதன் கதை வசனம் விசு. இதில் கமல், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நடித்தனர். பின்னர் ரஜினிகாந்த் நடித்த பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புதுக்கவிதைக்கும் கதைவசனம் எழுதினார். தொடர்ந்து பாலச்சந்தர், ஏவிஎம் நிறுவனத்து திரைக்கதை வசனம் எழுதுவது, நடிப்பது, படம் இயக்குவது என 80,90கள், 2000 இறுதிவரை விசு மிகப்பிசியாக இருந்தார்.

    தமிழில் முதல் தங்கத்தாமரை விருது பெற்ற சம்சாரம் அது மின்சாரம்

    தமிழில் முதல் தங்கத்தாமரை விருது பெற்ற சம்சாரம் அது மின்சாரம்

    1986 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் ஒரு படத்தை எடுக்க இவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க, அந்த பட்ஜெட்டுக்குள் படம் எடுத்து மீதத்தொகையையும் திருப்பி கொடுத்ததாக சொல்வார்கள். அந்தப்படம் ஏவிஎம் பட வரலாற்றில் மிகச்சிறப்பாக ஓடிய படம். சிறந்த படமாக தேசிய விருதுடன் தங்கத்தாமரை பெற்ற முதல் தமிழ் திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். இந்தப்படத்துக்கு பல விருதுகள் கிடைத்தது, பல மொழிகளில் பின்னர் இது எடுக்கப்பட்டது. ஏவிஎம் நிறுவனத்துக்கு மிகப்பெரிய வசூலை வாரிக் கொடுத்தது.

    குடும்ப உறவின் அருமையை பேசிய சம்சாரம் அது மின்சாரம்

    குடும்ப உறவின் அருமையை பேசிய சம்சாரம் அது மின்சாரம்

    குடும்ப உறவு என்பது பூ போன்றது அதை ரசிக்கணும், நுகரணும் கசக்கி பார்க்கக்கூடாது. பிறகு போன மணம் வராது என்ற வசனம் சிறப்பான ஒன்று. படத்தில் தந்தை மகன் இடையே நடக்கும் ஈகோ போராட்டம், இடையில் சிக்கி மருமகள் லட்சுமியின் பாசப்போராட்டம் அருமையாக எடுக்கப்பட்டிருக்கும். மனோரமாவின் 'கம்முனா கம் கம்னாட்டி கோ' வசனம் அன்று மிகப்பிரபலம்.

    பெண்கள், சமூக பிரச்சினை பற்றி பேசிய விசுவின் திரைக்கதைகள்

    பெண்கள், சமூக பிரச்சினை பற்றி பேசிய விசுவின் திரைக்கதைகள்

    2001 ஆம் ஆண்டு கடைசியாக படம் இயக்குவதை விசு நிறுத்தினார் ஆனால் தொடர்ந்து 2016 வரை படங்களில் நடித்து வந்தார். விசுவின் பெரும்பாலான படங்கள் சமூக அக்கறை, பெண்களின் பிரச்சினை, வரதட்சணை கொடுமை, விதவை மறுமணம் குறித்து பேசியது. சிக்கலாக கதையைக் கொண்டுச் சென்று நகைச்சுவையுடன் முடிப்பதில் விசு சிறப்பான தகுதியுள்ளவர். விசு படம் என்றால் கடைசி வரை பார்க்கலாம் என்பது 100% நிச்சயம்.

    அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம்

    அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம்

    தனது திரைப்பட வாழ்க்கைக்கு இடையே பிரபல தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் எனும் வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்தினார். மக்கள் பிரச்சினைகளை இளைஞர்கள், பள்ளி மாணவ மாணவிகளை வைத்து பேச வைத்தார். ஊர் ஊராக சென்று பொது நிகழ்ச்சி போல் நடத்தினார். பலருக்கு இந்நிகழ்ச்சி மூலம் உதவியும் கிடைத்தது. பின்னர் வேறு ஒரு தொலைக்காட்சியில் இணைந்து இதே நிகழ்ச்சியை மக்கள் அரங்கம் என நடத்தினார். இட ஒதுக்கீட்டில் நம்பிக்கை இல்லாதவர் விசு என்பார்கள். அவரது ஐடியாலஜி வேறாக இருந்தாலும் அவர் பெருவாரியான மக்களால் ரசிக்கப்பட்டார்.

    இன்னொரு விசு வருவாரா?

    இன்னொரு விசு வருவாரா?

    விசுவின் கடைசி காலத்தில் உடல் நலக்குறைவால் முடங்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அவர் தமிழ் சினிமாவில் கதைப்பஞ்சம், வலுவான திரைக்கதை, வசனம், காட்சி அமைப்பு, குறிப்பாக குடும்பப்பாங்கான படங்கள் குறைந்து வருவது குறித்து அதிகம் வருத்தப்பட்டார். அவர் உடல் நலக்குறைவால் தன்னுடைய 74 வது வயதில் காலமானார்.விசுவின் மனக்குறையை போக்கும் வகையில் படம் வருவது அரிதான ஒன்றாகவே உள்ளது. வன்முறையை நம்பும் பான் இந்தியா படங்கள் விசு போன்ற நல்ல கலைஞர்கள் வருவதை முடக்கினாலும் காலம் அனைத்தையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பதால் நம்பிக்கையுடன் காத்திருப்போம், இன்னொரு விசு வராமலா போய்விடுவார்?

    English summary
    Famous for writing family-style screenplays, unique in dialogues, successful Tamil movie director Visu, has improved his career from small dramas to the big screen in Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X