Theatre Release Movies: இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் மோதும் படங்கள்.. வசூலை அள்ளும் படம் எது?

சென்னை: ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த 10ந் தேதி வெளியாகி தற்போது வரை சக்கைப்போடு போட்டு நன்றாக கல்லாக்கட்டி வருகிறது.

மாஸ் நடிகரான ரஜினி படம் வெளியானதால், கடந்த வாரம் எந்த படங்களும் வெளியாகவில்லை. இதனால்,இந்த வாரம் பல சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

king of kotha and adiyae this week theatre release movies August 25th

கிங் ஆஃப் கோதா: அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் படம் கிங் ஆஃப் கோதா. இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இதில் ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர், செம்பன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசை அமைத்துள்ள இப்படத்திற்கு நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஒரு பான் இந்தியா படமாக நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது

king of kotha and adiyae this week theatre release movies August 25th

பார்ட்னர்: அறிமுக இயக்குனர் மனோ தாமோதரன் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள பார்ட்னர் திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், மேலும், பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

king of kotha and adiyae this week theatre release movies August 25th

அடியே: ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் அடியே படத்தில் கவுரி கிஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார் இப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது.

king of kotha and adiyae this week theatre release movies August 25th

ஹர்காரா: இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஹர்காரா. இப்படத்தில் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்கு செல்லும் போஸ்ட்மேன் அங்கு படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும் பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 25ந் தேதி வெளியாக உள்ளது.

ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா: இயக்குனரும், நடிகருமான ஜி. சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா. இப்படம் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

king of kotha and adiyae this week theatre release movies August 25th

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X