King of Kotha: “இங்க நான் தான் கவர்மெண்ட்..” மிரட்டும் துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா ட்ரெய்லர்!
திருவனந்தபுரம்: துல்கர் சல்மான் நடித்துள்ள கிங் ஆஃப் கோதா படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள கிங் ஆஃப் கோதா இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் இன்று வெளியானது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லரை, நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

வெளியானது கிங் ஆஃப் கோதா ட்ரெய்லர்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், தற்போது கிங் ஆஃப் கோதா படத்தில் நடித்துள்ளார். அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது. ஜீ ஸ்டூடியோஸுடன் இணைந்து துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு வெளியான 'சீதா ராமம்' துல்கர் சல்மான் கேரியரில் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததுடன், 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பிலும் இணைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 'கிங் ஆஃப் கோதா' திரைப்படமும் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்க வைத்துள்ளது. கேங்ஸ்டர் ஜானரில் ஆக்ஷன் மூவியாக உருவாகியுள்ளது கிங் ஆஃப் கோதா. துல்கர் சல்மானுடன் ஐஸ்வர்யா லக்ஷ்மி, ரித்திகா சிங், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், கிங் ஆஃப் கோதா படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. நேற்று (ஆக.9) வெளியாகவிருந்த இந்த ட்ரெய்லர், மலையாள இயக்குநர் சித்திக்கின் மறைவால் இன்று (ஆக.10) ரிலீஸ் செய்யப்பட்டது. மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா ட்ரெய்லரை சூர்யா வெளியிட்டுள்ளார். ஆரம்பம் முதலே அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் மிரட்டுகிறது இந்த ட்ரெய்லர்.
"ராஜூவோட லட்சியமே அவனோட அப்பா மாதிரி பெரிய ரவுடி ஆகணும்ங்குறது தான்" என தொடங்கி, கொத்தா என்ற பகுதியில் நடக்கும் கேங்ஸ்டர் சாம்ராஜ்யத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. முக்கியமாக துல்கர் சல்மானின் லுக், அவரது பாடி லேங்குவேஜ், காஸ்ட்யூம், ஆக்டிங் என அனைத்துமே செம்ம மிரட்டலாக உள்ளது. காட்சிக்கு காட்சி செம்ம ஹைப் கொடுத்துள்ள கிங் ஆஃப் கோதா ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மலையாளத்தில் அதிகமாக கேங்ஸ்டர் படங்கள் வெளியாகாத நிலையில், துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா வேற லெவல் சம்பவமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. துல்கர் சல்மான், பிரசன்னா, செம்பன் வினோத் என தரமான கூட்டணியில் ரியல் கேங்ஸ்டர் ஃபைட்டரை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்தப் படம் ஓணம் ஸ்பெஷலாக வரும் 24ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











