King of Kotha: ஜெயிலருடன் வெளியாகும் கிங் ஆஃப் கோதா ட்ரெய்லர்... இது ரஜினி-துல்கர் சல்மான் காம்போ!

திருவனந்தபுரம்: மலையாள ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கிங் ஆஃப் கோதா.

துல்கர் சல்மான் நடிப்பில் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா, பான் இந்தியா படமாக வெளியாகிறது.

 King of Kotha: Dulqer Salmaan’s King Of Kotha Trailer Released With Rajinikanths Jailer

இந்தப் படத்தை ஓணம் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ரஜினியின் ஜெயிலர் படத்துடன் கிங் ஆஃப் கோதா ட்ரெய்லர் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயிலருடன் வெளியாகும் கிங் ஆஃப் கோதா ட்ரெய்லர்: மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், பான் இந்திய நடிகராக கலக்கி வருகிறார். மலையாளத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள துல்கர் சல்மானுக்கு, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிக்கவும் அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதனால், துல்கர் சல்மானுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

கடந்தாண்டு வெளியான 'சீதா ராமம்' துல்கர் சல்மானுக்கு மிகப் பெரிய சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் நடிப்பில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம். கேங்ஸ்டர் ஜானரில் பக்கா ஆக்‌ஷன் மூவியாக உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். துல்கர் சல்மானுடன் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ரித்திகா சிங், சார்ப்பட்டா பரம்பரை புகழ் 'டான்சிங் ரோஸ்' சபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கிங் ஆஃப் கோதா படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் காரைக்குடி பகுதிகளில் தான் அதிகம் நடைபெற்றது. 1980களில் நடைபெறும் பீரியட் படமாக உருவாகியுள்ள 'கிங் ஆஃப் கோதா'-வில், நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிங் ஆஃப் கோதா இந்தாண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 24ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனால், தற்போது ப்ரொமோஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் துல்கர் சல்மான்.

முன்னதாக கிங் ஆஃப் கோதா கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் மீண்டும் ஷூட்டிங் செய்யயப்பட்டது. இதுகுறித்து துல்கர் சல்மானே உண்மையை பேசியிருந்தார். அதாவது, "கிங் ஆஃப் கோதா க்ளைமாக்ஸ் ரீ ஷூட் நடந்தது உண்மைதான். அது கதையின் ஓட்டத்தோடு பார்க்கும்போது இன்னும் பிரம்மாண்டமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக" எனக் கூறியிருந்தார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து செம்ம மாஸ்ஸான அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது வரும் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகிறது. சோலோவாக களமிறங்கும் ஜெயிலருக்காக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உட்பட உலகம் முழுவதும் பெரும்பாலான ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் ஜெயிலர் வெளியாகும் திரையரங்குகளில் கிங் ஆஃப் கோதா ட்ரெய்லரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

ரஜினியும் மம்முட்டியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா ட்ரெய்லரை ஜெயிலர் படத்துடன் வெளியிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லையென தெரிகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியும் க்ரீன் சிக்னல் கொடுத்து, துல்கர் சல்மானுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாராம். இந்நிலையில், ஜெயிலர் படத்துடன் வெளியாகவுள்ள 'கிங் ஆஃப் கோதா' ட்ரெய்லரை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X