King of Kotha Twitter Review: துல்கர் பாஸ் ஆனாரா..? கிங் ஆஃப் கோதா ட்விட்டர் விமர்சனம் இதோ!!
சென்னை: மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா திரைப்படம் இன்று வெளியானது.
அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான கிங் ஆஃப் கோதாவுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இதனால், இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கிங் ஆஃப் கோதா படத்திற்கு நெட்டிசன்களின் ரியாக்ஷன் என்ன என்பதை டிவிட்டர் விமர்சனத்தில் பார்க்கலாம்.
கிங் ஆஃப் கோதா டிவிட்டர் விமர்சனம்: மலையாள டாப் ஹீரோக்களில் ஒருவரான துல்கர் சல்மான், தற்போது பான் இந்தியா படங்களிலும் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் உருவான கிங் ஆஃப் கோதா திரைப்படம் ஓணம் ஸ்பெஷலாக இன்று வெளியானது. கேங்ஸ்டர் ஜானரில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா-வை அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
கிங் ஆஃப் கோதா ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி படத்துக்கு அதிக ஹைப் கொடுத்திருந்தது. அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், பிரசன்னா, சபீர், ஐஸ்வர்யா லக்ஷ்மி, செம்பன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முக்கியமாக துருவ் விக்ரம் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்தப் படம் குறித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதன்படி, கிங் ஆஃப் கோதா திரைப்படம் ஜஸ்ட் ஓக்கே என நெட்டிசன் ஒருவர் ட்விட் செய்துள்ளார்.
துல்கர் சல்மானின் கேரக்டர் மாஸ் அவதாரம், கேங்ஸ்டர் கேரக்டரில் மிரட்டியுள்ளார். சபீர், ஷம்மி திலகன், நைலா உஸ்லா ஆகியோரின் நடிப்பு சூப்பர். விஷுவல்ஸும் பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஆனால், பார்த்து பழகிய கதை தான் என்பதாலும் மெதுவாக நகரும் திரைக்கதை காரணமாக படம் அவரேஜ் என சிகே ரிவியூ தளம் விமர்சனம் செய்துள்ளது.
கிங் ஆஃப் கோதா படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃப் செம்ம சூப்பர் என்றும், படம் முழுவதும் பக்கா மாஸ் எலிமெண்ட்ஸ் உடன் இருப்பதாக இன்னொரு நெட்டிசன் விமர்சனம் செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய்-இன் பின்னணி இசையையும் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பார்த்த சிறந்த திரைப்படம் கிங் ஆஃப் கோதா என இன்னொரு நெட்டிசன் ட்வீட் செய்துள்ளார். துல்கர் சல்மானின் நடிப்பில் படம் மிரட்டலாக உருவாகியுள்ளது. பின்னணி இசையும் நன்றாக வந்திருப்பதாக விமர்சித்துள்ள நெட்டிசன் ஒருவர், கிங் ஆஃப் கோதாவுக்கு 3.5 ரேட்டிங் கொடுத்துள்ளார்
அதேபோல், கிங் ஆஃப் கோதா முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதியில் திரைக்கதை, பாடல்கள், பின்னணி இசை, துல்கர் சல்மானின் நடிப்பு அட்டகாசம் என Mr Reviewer என்ற டிவிட்டர் தளம் விமர்சித்துள்ளது. மேலும், கிங் ஆஃப் கோதா ஒட்டுமொத்தமாக சிறந்த கேங்ஸ்டர் படம் என்று 4.3 ரேட்டிங் கொடுத்துள்ளது.
சமீபத்தில் வெளியான சிறந்த பக்கா கமர்சியல் படங்களில் கிங் ஆஃப் கோதா முக்கியமானது. ஆக்ஷன் காட்சிகள், பிஜிஎம், க்ளைமாக்ஸ் அனைத்தும் செம்ம மாஸ் என கூறியுள்ள நெட்டிசன் ஒருவர், பாக்ஸ் ஆபிஸிலும் சம்பவம் இருக்கு என குறிப்பிட்டுள்ளார். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எனவும் அவர் டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், கிங் ஆஃப் கோதா திரைப்படம் ப்ளாக் பஸ்டர் என நெட்டிசன் விமர்சனம் செய்துள்ளார். துல்கர் சல்மானின் நடிப்பு வேற லெவல் என்றும், மலையாளத்தில் புதிய மாஸ் ஹீரோ உருவாகிவிட்டதாகவும் கூறியுள்ளார். பிஜிஎம் உட்பட அனைத்திலும் கிங் ஆஃப் கோதா ஒரு மாஸ் எண்டர்டெய்னர் என நெட்டிசன் ஒருவர் விமர்சித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. அதேநேரம் முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதால், இனிவரும் நாட்களிலும் கிங் ஆஃப் கோதாவுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் டிவிட்டர் விமர்சனங்களைப் பார்க்கும் போது கிங் ஆஃப் கோதா படத்துக்கு 3.5 ரேட்டிங் கொடுக்கலாம் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











