Kingdom X Review: சாம்ராஜ்யமா? சறுக்கலா? விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ட்விட்டர் விமர்சனம் இதோ

ஹைதராபாத்: கெளதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியான கிங்டம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேஜிஎஃப் பாணியில் படம் தாறுமாறாக உருவாக்கப்பட்ட காட்சிகள் டிரைலரில் மிரட்டின. அதிலும், அந்த கடைசி மாஸ்க் போட்ட நபர் யார் என்பது குறித்து அறிந்துக் கொள்ள ஆர்வமாக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

நடிகர் நானி நேற்று இரவு வெளியிட்ட எக்ஸ் பக்க பதிவில், கிங்டம், காந்தா, கூலி, வார் 2 என தொடர்ந்து சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய சீசனாக அமையப் போகிறது. அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என எந்தவொரு ஈகோவும் இல்லாமல், சக நடிகர் படம் வெற்றிப் பெற வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.

Kingdom X Review Vijay Deverakonda s performance is the only saviour told by fans

அதை பார்த்த துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா நானியின் நல்ல உள்ளத்தை பாராட்டி, கிங்டம் படத்தில் இருந்து இந்த வெற்றி திருவிழா தொடங்கட்டும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில், கிங்டம் படத்தை பார்த்த ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் படத்துக்கு கொடுத்து வரும் விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

வெறித்தனமான பர்ஃபார்மன்ஸ்: விஜய் தேவரகொண்டாவுக்கு அர்ஜுன் ரெட்டி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதன் பின்னர், அவர் நடித்த ஒரு சில படங்கள் அவருக்கு லவ்வர் பாய் அந்தஸ்த்தை பெற்றுத் தந்தது. கடைசியாக சமந்தாவுடன் குஷி, மிருணாள் தாகூருடன் ஃபேமிலி ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில், உடல் எடையை அதிகரித்து, மொட்டையடித்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு படத்திற்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் உழைப்பை கொட்டலாம் என நினைத்து உழைத்துள்ளார் என படம் பார்த்த பலரும் விஜய் தேவரகொண்டாவின் பர்ஃபார்மன்ஸை பாராட்டி வருகின்றனர்.

செகண்ட் ஹாஃப் சுமார்: கிங்டம் படம் விஜய் தேவரகொண்டாவுக்கு பிளாக்பஸ்டர் படமாக அமையவில்லை என்றும் முதல் பாதி சாலிட்டாக தொடங்கினாலும், அதன் இரண்டாம் பாதி ரொம்பவே தலையை சுத்தி மூக்கைத் தொடும் கதையாக மாறிய நிலையில், டல் அடிப்பதாக இந்த நெட்டிசன் ஓகே படம் என விமர்சனம் கொடுத்துள்ளார்.

2.75 ரேட்டிங் தான்: பிரபல தெலுங்கு விமர்சகர் வெங்கி விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு வெறும் 2.75 ரேட்டிங் தான் கொடுத்துள்ளார். வெங்கி இந்தளவுக்கு ரேட்டிங் கொடுத்தாலே அந்த படம் பிளாக்பஸ்டர் தான் என சோஷியல் மீடியாவில் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் கூறி வருகின்றனர். தொழில்நுட்பக் கலைஞர்கள், விஜய் தேவரகொண்டா நடிப்பு என அனைத்தும் நல்லா இருந்தாலும், படம் எங்கேயும் எமோஷனலாக கனெக்ட் ஆகவில்லை என விமர்சித்துள்ளார்.

மொக்கப் படம்: இந்த நெட்டிசன் வெறும் 0.5 ரேட்டிங் தான் கொடுத்துள்ளார். தேவையற்ற பில்டப் காட்சிகள் மட்டுமே உள்ளதாகவும், படத்துக்கு தேவையான விஷயங்களோ ரசிகர்களை குஷிப்படுத்தும் ஹை மொமண்ட்டுகளோ படத்தில் சுத்தமாக இல்லை. விஜய் தேவரகொண்டாவின் உழைப்பை கிங்டம் படத்தின் இயக்குநர் வீணடித்து விட்டதாக நெட்டிசன்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X