'கிங்ஸ் ஆப் டான்ஸ்' நிகழ்ச்சி புகழ் ஹரி பைக் விபத்தில் பலி: ரசிகர்கள் அதிர்ச்சி
Recommended Video

சென்னை: விஜய் தொலைக்காட்சி சேனலில் வெளியான கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஹரி பைக் விபத்தில் உயிர் இழந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ஹரி(21). முதல் சீசனில் அவரும், சாண்டி சுந்தரும் கிராண்ட் பினாலே வரை வந்தனர்.
இந்நிலையில் ஹரி சாலை விபத்தில் உயிர் இழந்துள்ளார்.

விபத்து
ஹரி தனது பைக்கில் சென்னையில் உள்ள கதீட்ரல் சாலை அருகே சென்றபோது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். 21 வயதே ஆன ஹரி இறந்த செய்தி அறிந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாராட்டு
ஹரியின் நடனத்தை பார்த்து நடுவர்கள் அவரை வெகுவாக பாராட்டினார்கள். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று தெரிவித்த நிலையில் அவர் அதற்குள் இறந்துவிட்டார்.

ப்ரியங்கா
என்னால் இன்னும் இதை நம்ப முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக உள்ளது. அதற்குள் சென்றுவிட்டாயே ஹரி. உன் ஆத்மா சாந்தியடையட்டும் என்று டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ப்ரியங்கா தேஷ்பாண்டே ட்வீட்டியுள்ளார்.
கவலை
ஹரி இறந்த செய்தி அறிந்த ரசிகர்கள் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











