»   »  கார் விபத்தில் கிரண் படுகாயம்

கார் விபத்தில் கிரண் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

நடிகை கிரண் கார் விபத்தில் படுகாயமடைந்தார். அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

ஜெமினி மூலம் அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளவர் கிரண். தற்போது தமிழில்வாய்ப்பிழந்த அவர் தெலுங்கு, இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கிரண், இரவு பார்ட்டிக்குப் போய் விட்டு நண்பர்களுடன் காரில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சாலையின் குறுக்கே ஒரு எருமை மாடு வந்து விட்டது. கார் வேகமாக சென்றதால், உடனடியாகநிறுத்த முடியவில்லை. டிரைவர் வேகமாக பிரேக் போட்டபோது தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் கவிழ்ந்துவிழுந்தது. இதில் காரின் பெரும் பகுதி சேதமடைந்து போனது.

காருக்குள் சிக்கிக் கொண்ட கிரண் படுகாயமடைந்தார். அவரது வலது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு,எலும்பு வெளியே வந்து விட்டது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த கிரணை, அங்கிருந்தவர்கள் வெளியே மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் 20க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன.

தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் கிரண், ஆண்டவன் அருளால்தான் உயிர் பிழைத்தேன். இவ்வளவுபெரிய விபத்து நடந்தும் எனது முகத்தில் காயம் ஏதும் ஏற்படவில்லை.

விபத்தால் நான் நடித்து வரும் 3 இந்திப் படங்கள், 2 தென்னிந்தியப் படங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடல்நலம் சரியானதும் நடிக்க வருவேன் என்றார் கிரண்.

தடுக்கி விழுந்து சரோஜா தேவி காயம்:

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி படப்பிடிப்பின்போது புடவை தடுக்கி கீழே விழுந்து காயமடைந்தார்.

நடிகை சரோஜா தேவி கன்னடப் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். பிராரம்பம் என்ற கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அவர் கம்பீரமாக நடந்து வருவது போல ஒரு காட்சியைஎடுத்தனர்.

சரோஜா தேவியும் தனக்கே உரிய பாணியில் கம்பீரமாக, புன்னகையுடன் நடந்து வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அணிந்திருந்த புடவை தடுக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது கைஎலும்பு, தோள் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இருப்பினும் வலியைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து நடித்தார். அவரது டெடிகேஷனைப் படக்குழுவினர் பாராட்டினார். பின்னர் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவரை சிகிச்சைக்காக தனியார்மருத்துவமணைக்கு சென்றார்.

அவருக்கு அங்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவை எடுத்துப் பார்க்கப்பட்டது. எலும்பு முறிவு காரணமாக இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஓய்வில்இருக்கிறார் சரோஜா தேவி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil