அஜித், சூர்யாவுக்கெல்லாம் நான்தான் ஜிம் கோச்சாக்கும்.. கெத்து காட்டும் லேடி பாகுபலி கிரண் டெம்பலா!
சென்னை: லேடி பாகுபலி என்று அழைக்கப்படும் பிட்னஸ் ட்ரெயினர் கிரண் டெம்பலாவின் பாடி பில்டிங் போட்டோக்கள் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் இந்தத்துறையில் சாதித்த கதையும் வைரலாகி வருகிறது.
Recommended Video
ஆக்ராவை சேர்ந்தவர் கிரண் டெம்பலா. பாடி பில்டிங் சாம்பியனான கிரண் டெம்பலா, இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர்.
இவரது கணவரான அஜித் ஒரு மல்டி நேஷனல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 2006ஆம் ஆண்டு வரை ஆக்ராவில் இருந்த கிரண் டெம்பலா அதற்கு பிறகு ஹைதராபாத்துக்கு குடி பெயர்ந்து விட்டார்.

பாடி பில்டரானது எப்படி?
அஜித், சூர்யா, பிரபாஸ், தமன்னா, எஸ்எஸ் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கும் ஃபிட்னஸ் ட்ரெயினராக உள்ளார் கிரண் டெம்பலா. இல்லத்தரசியான தான் எப்படி பாடி பில்டர் ஆனேன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார் கிரண் டெம்பலா.

மூளையில் ரத்தக்கட்டு
ஒரு நாள் கடுமையான தலைவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் கிரண் டெம்பலா. அப்போது அவரது மூளையில் ரத்த கட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த குடும்பம் அதிர்ச்சியில் மூழ்க, அதற்கான சிகிச்சையை பெற்று வந்துள்ளார் கிரண் டெம்பலா.

யோகா வகுப்பு
உட்கொண்ட மருந்துகளால் உடல் எடை கூட, ஆளே மாறிப்போயிவிட்டாராம் கிரண் டெம்பலா. இதனால் தன்னை தானே பார்த்து வருத்தப்பட்ட கிரண் டெம்பலா, உடல் எடையை குறைக்க யோகா வகுப்புகளுக்கு சென்றதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்.

24 கிலோ எடை குறைப்பு
2007ஆம் ஆண்டு முதல் கொஞ்சம் கொஞ்சமாக நோயில் இருந்து விடுபட தொடங்கிய கிரண் டெம்பலா பின்னர் ஜிம்முக்கும் செல்ல ஆரம்பித்துள்ளார். ஜிம் மட்டுமின்றி நீச்சல் வகுப்புகளுக்கும் செல்ல தொடங்கியுள்ளார். அவர் தொடர்ந்து மேற்கொண்ட கடின உடற்பயிற்சி காரணமாக 6 முதல் 7 மாதங்களில் 24 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

ஜிம் தொடங்கிய கிரண்
இதனால் தன்னுடைய உடல் எடையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவர் உடல் எடையில் ஏற்பட்ட பெரிய மாற்றம் பலரையும் வியக்க வைத்துள்ளது. இதனை தொடர்ந்து 2008ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஜிம் தொடங்கினார் கிரண் டெம்பலா. ராம்சரணின் மனைவி உபசனா திருமணத்திற்கு முன்பே எடையை குறைக்க அவரிடம் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டாராம்.

ஆணாக மாறுவதாக..
தொடர்ந்து தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோருக்கும் பாகுபலி, மிர்ச்சி ஆகிய படங்களுக்கும் பயிற்சி அளித்துள்ளதாக கூறியுள்ளார். ராஜமவுலி, பிரகாஷ் ராஜ் போன்ற நடிகர்களுக்கும் பிட்னஸ் ட்ரெயினராக உள்ளதாக தெரிவித்துள்ளார். பலரும் என்னை பார்த்து ஆணாக மாறி வருவதாக கூறினார்கள்.

அடுத்தடுத்து சோகம்
ஆனால் அதற்கெல்லாம் நான் வருந்தவில்லை. 2013ஆம் ஆண்டு ஹங்கேரியில் நடைபெற்ற உலக பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தான் நேரடி தகுதி பெற்ற முதல் பெண் ஆனதாக கூறியுள்ள கிரண் டெம்பலா, அந்த போட்டிக்கு தான் தயாரானபோதுதான் தனது குடும்பத்தில் அடுத்தடுத்து மூன்று மரணங்கள் நிகழ்ந்ததாக கூறியுள்ளார்.

மோஸ்ட் பியூட்டிஃபுல் பாடி
இதனால் சரியான உணவு கூட எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் இருந்ததாகவும் அப்போது தனது கணவர் பெரும் ஆதரவாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த போட்டியில் சிக்ஸ் பேக்குடன் பங்கேற்று மோஸ்ட் பியூட்டிபுல் பாடிக்கான பதக்கத்தை வென்றதாக கூறியுள்ளார்.

சிக்ஸ் பேக் போட்டோ ஷுட்
தன்னுடைய அம்மா, தங்கை என யாருக்கும் தான் பாடி பில்டராக இருப்பது பிடிக்கவில்லை என்றும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக இசை கற்று வருவதால் அதில் கவனம் செலுத்தும்படி கூறியதாகவும் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு தனது 49வது பிறந்தநாளில் தான் சிக்ஸ் பேக்கில் போட்டோ ஷுட் நடத்திய பிறகே தன்னை பற்றி பலருக்கு தெரிந்ததாகவும் கூறியுள்ளார் கிரண் டெம்பலா.

வைரல் போட்டோக்கள்
கிரண் டெம்பலா திரைத்துறையினர் மட்டுமின்றி ஹைதராபாத் காவல்துறையினருக்கும் ஃபிட்னஸ் பயிற்சி அளித்துள்ளார். இதனிடையே கிரண் டெம்பலா சேலையில் ஆண்களுக்கு நிகராக ஆர்ம்ஸ், சிக்ஸ் பேக் என கட்டுடலுடன் போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications