விஜய் படத்தில் புதுஸ்ஸ்ஸ்ஸா ஒரு 'கிரண்'...!

By Sudha

சென்னை: விஜய் நடிக்கும் தலைவா படத்தில் புத்தம் புதிதாக ஒரு ஐட்டம் நடிகையை அறிமுகப்படுத்துகின்றனர். வழக்கம் போல இவரும் மும்பைதான். அங்கிருந்து தமிழுக்கு வந்துள்ள இவர் தலைவா படத்தில் அசத்தலான குத்தாட்டம் போட்டுள்ளாராம்.

இவரது பெயர் கிரண். நம்ம பழைய ஹீரோயின் கிரண் அல்ல.இவர் சுத்தமான ஐட்டம் டான்ஸராம். இவர்தான் தலைவா படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளாராம்.

சமீபத்தில்தான் சென்னையி்ல் இப்பாடலை பின்னி மில்லில் வைத்து ஷூட் செய்தனராம். சும்மா சொல்லக் கூடாது, பாட்டு பட்டையைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளதாம்.

கிரண் மட்டுமல்ல...

கிரண் மட்டுமல்ல...

இந்தப் பாடலில் கிரண் மட்டுமல்லாமல் மேலும் ஐந்து அழகிகளும் கூட ஆடியுள்ளனராம். ஆறு பேரும் சேர்ந்து போட்டுள்ள இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத் திண்டாட்டமாக அமையும் என்கிறார்கள்.

அமலா பாலுக்கு சவால்தான்

அமலா பாலுக்கு சவால்தான்

படத்தின் நாயகி என்னவோ அமலா பால்தான். ஆனால் அவரிடம் அதிகம் கவர்ச்சியைக் கறக்க முடியாது என்பதால் கவர்ச்சிக்காகவே இந்த ஆறு அழகிகளையும் கூட்டி வந்து ஆட வைத்து ஷூட் செய்துள்ளனராம்.

பிரகாஷ் குமார் இசையில்

பிரகாஷ் குமார் இசையில்

தலைவா படத்திற்கு பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்பாடலை விஜய் ரசிகர்களுக்கேற்றபடி அதிரடியாக மெட்டமைத்துள்ளாராம் பிரகாஷ்.

முக்கிய வேடத்தில் சத்யராஜ்

முக்கிய வேடத்தில் சத்யராஜ்

நண்பன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவரான சத்யராஜ், தற்போது 2வது முறையாக விஜய்யுடன் இணைந்து இந்தப் படத்திலும் நடித்துள்ளார். இதிலும் அவருக்கு முக்கிய வேடமாம்.

தலைவா.. தலைவா...

தலைவா.. தலைவா...

இதேபோல சமீபத்தில் தலைவா தலைவா என்ற பாடலையும் பிரமாண்டமான முறையில் படமாக்கினார் இயக்குநர் ஏ.எல். விஜய். இப்பாடலில் 250 டான்ஸர்கள் ஆடினர். சின்னி பிரகாஷ் நடனத்தை வடிவமைத்திருந்தார். 50 படகுகளை வடிவமைத்து அதில் ஆடிப் பாடுவது போல இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X