'முதல்ல உங்க காஸ்ட்யூம் டிசைனரை மாத்துங்க, முடியலை..' முன்னாள் ஹீரோயினுக்கு ரசிகாஸ் கோரிக்கை!

By

சென்னை: பிரபல முன்னாள் ஹீரோயின் வெளியிட்டுள்ள போட்டோவை, ரசிகர்கள் கண்டபடி கலாய்த்துள்ளனர்.

Recommended Video

ACTRESS KIRAN GLAMOUR ROUTE | TALKING 2 MUCH - EP-05 | Filmibeat Tamil

இப்போதைய இளம் ஹீரோயின்களுக்கு சரிசமமாக முன்னாள் ஹீரோயின்கள் ஹாட் போட்டோ வெளியிடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

பல பாலிவுட் முன்னாள் ஹீரோயின்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இன்ஸ்டாவை இதற்கென்றே இஷ்டத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

 தமிழ்ப் பாசம்

தமிழ்ப் பாசம்

தமிழ் சினிமாவின் முன்னாள் ஹீரோயின் கிரணும் இந்த லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார். டிக்டாக்கில் தமிழ்ப் பாடல்களுக்கு ஆடி, பாடி தமிழ்ப் பாசம் காட்டிய கிரண், இந்த லாக்டவுனில் தனது கிளாமர் ஸ்டில்களை பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன், ஆம்பள சட்டையில் அவர் பதிவிட்டிருந்த போட்டோக்கள் வைரலாயின.

 விவகார ரசிகர்கள்

விவகார ரசிகர்கள்

ரசிகர்கள் அதற்கு கண்டபடி கமென்ட்களை பதிவு செய்திருந்தனர். இப்போது புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டிருக்கிறார், நடிகை கிரண். இந்த போட்டோவில் கொஞ்சம் குண்டாகவே தெரிகிறார், கிரண். அவரது டிரெஸ்சும் எக்குத்தப்பாக இருக்கிறது. போதாதா, இந்தப் போட்டோவையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளாசித் தள்ளுகின்றனர் விவகார ரசிகர்கள். வழக்கமான சில ரசிகர்களுக்கு ஓடி வந்து பதில் சொல்லும் கிரண், இப்போது கப்சிப்!

 ஃபேஷன் டிசைனர்

ஃபேஷன் டிசைனர்

ஒருவர், யப்பா முடியலை, உடலை எப்படி மெயின்டெய்ன் பண்றீங்க? என்று கேட்டுள்ளார். நீங்க சும்மாவே ஹாட், இப்படி தலையில கையை வச்சுக்கிட்டு பார்த்தீங்கன்னா, எப்படி? என்று ஒரு நெட்டிசன் கேட்டுள்ளார். இன்னொருவர், முதல்ல உங்க ஃபேஷன் டிசைனரை மாத்துங்க.. இது என்ன கொடுமை டிரெஸ்? என்று கேட்டிருக்கிறார். சிலர், மாமி ரவுசு தாங்க முடியலையே என்று கூறியுள்ளனர்.

 டபுள் மீனிங் தாறுமாறு

டபுள் மீனிங் தாறுமாறு

சூப்பரா இருக்கீங்க.. இதே போல நிறைய போட்டோஸ் அப்லோட் பண்ணுங்க கிரண் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். சிலர் டபுள் மீனிங்கில் தாறுமாறாக கமென்ட் அடித்துள்ளனர். சில நெட்டிசன்ஸ் வழக்கம்போல அன்பே, ஆருயிரே, நீங்க தேவதை என்கிற லெவலில் கமென்ட் அடித்துள்ளனர். இந்தப் போட்டோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். இந்த போட்டோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 சர்வர் சுந்தரம்

சர்வர் சுந்தரம்

நடிகை கிரண் விக்ரமின் ஜெமினி மூலம் ஹீரோயின் ஆனவர். அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாரின் திவான், அரசு, பிரஷாந்த் நடித்த வின்னர் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து வந்த இவர், இப்போது கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X