Don't Miss!
- News
அடிதூள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட செம அறிவிப்பு.. களமிறங்கிய சர்வதேச "டீம்".. சென்னைக்கு குட்நியூஸ்
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Lifestyle
கலோரிகள் குறைவாக உள்ள இந்த 7 உணவுகள சாப்பிட்டா... உங்க எடை டக்குனு குறைஞ்சிடுமாம்...!
- Technology
Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா? போட்டோ கூட ரிட்டன் வருமா?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
'பிக்பாஸ்ல வர்றீங்கள்ல..கண்டிப்பா மீட் பண்றோம், வெயிட்டிங்' பிரபல நடிகைக்கு காத்திருக்கும் ஃபேன்ஸ்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்களைப் பார்க்க ஆர்வமாக இருப்பதாக பிரபல நடிகையிடம் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
Recommended Video
இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு போட்டோவாக போட்டுத் தாக்கும் நடிகைகளில் ஒருவர், நம கிரண்.
சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ஜெமினி' படம் மூலம் ஹீரோயின் ஆனாரே, அவரேதான்!
அப்போ அப்டி சொன்னீங்க.. இப்போ இப்டி சொல்றீங்க.. பிக்பாஸ் போறீங்களா இல்லையா.. குழப்பும் பிரபல நடிகை!

அஜித்தின் வில்லன்
ஜெமினி மூலம் ஹீரோயின் ஆன கிரண், அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாரின் திவான், பிரஷாந்த் நடித்த வின்னர் உட்பட பல படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து வந்த இவர், இப்போது கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.

கன்னாபின்னா
முன்னாள் ஹீரோயின் ஆகிவிட்ட கிரணுக்கு இப்போதும் கன்னா பின்னா ரசிகர்கள். அவர்களை இப்போதும் அமைதியாக மெயின்டெயின் பண்ணிக்கொண்டிருக்கிறார் சோசியல் மீடியாவில். அவர் ஒரு போட்டோ பதிவு செய்தால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளித் தெளிக்கிறார்கள். கமென்ட்களுக்கும் பஞ்சமில்லை.

கிளாமர் புகைப்படங்கள்
தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர், அதற்கு ரசிகர்கள் கொடுக்கிற ரியாக்ஷன்களை அதிகமாக ரசிக்கிறார். அதற்காகவோ என்னவோ அவரை அப்படி புகழ்ந்து தள்ளுகிறார்கள் ரசிகர்கள்.

தமிழ் சினிமா
கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழ் சினிமாவை மிஸ் பண்ணுவதாகக் கூறியிருந்தார். ரசிகர்களின் கேள்விகளுக்குத் தமிழில் பதில் சொல்லி அசத்தினார். சில நாட்களாக தினமும் நான்கைந்து கிளாமர் ஸ்டில்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஹாலிவுட் நடிகை
இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. பலர் அவர் அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர். ஒருவர், ஒரு போட்டோவுல அப்படியே ஹாலிவுட் நடிகை கேத் வின்ஸ்லெட் மாதிரியே இருக்கீங்க என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன், பிக் பாஸ் 4-ல மீட் பண்ண வெயிட் பண்றோம் என்று கூறியுள்ளார்.

அப்படியே இருக்கீங்க
சிலர், வர வர ரொம்ப அழகாயிட்டே போறீங்க.. என்ன சீக்ரெட்? என்று கேட்டுள்ளார். பிக்பாஸ்ல கலந்துக்கறீங்க இல்ல? அதுபற்றி தகவல் சொல்லுங்களேன் என்று ஒருவரும் கேட்டுள்ளனர். சிலர் ஜெனிமியில பார்த்த மாதிரியே அப்படியே இருக்கீங்க என்றும் கூறியுள்ளனர். இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.