'ஆல் டைம் ஃபேவரைட் நீங்கதான்..' ஸ்டைல் ஸ்டில் வெளியிட்ட முன்னாள் ஹீரோயினை புகழும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல முன்னாள் ஹீரோயின் வெளியிட்டுள்ள செம ஸ்டைல் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் ஒருவர், கிரண்.
சரண் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்த 'ஜெமினி' மூலம் ஹீரோயின் ஆனவர் இவர்.

அன்பே சிவம்
ஜெமினி மூலம் ஹீரோயின் ஆன கிரண், அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாரின் திவான், பிரஷாந்த் நடித்த வின்னர் உட்பட பல படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து வந்த இவர், இப்போது கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.

ஏகப்பட்ட ரசிகர்கள்
முன்னாள் ஹீரோயின் ஆகிவிட்ட கிரணுக்கு இப்போதும் ஏகப்பட்ட ரசிகர்கள். அவர்களை இப்போதும் அமைதியாக மெயின்டெயின் பண்ணிக் கொண்டிருக்கிறார் சோசியல் மீடியாவில். அவர் ஒரு போட்டோ பதிவு செய்தால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளித் தெளிக்கிறார்கள்.

அதிகமாக ரசிக்கிறார்
தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர், அதற்கு ரசிகர்கள் கொடுக்கிற ரியாக்ஷன்களை அதிகமாக ரசிக்கிறார். அதற்காகவோ என்னவோ அவரை அப்படி புகழ்ந்து தள்ளுகிறார்கள் ரசிகர்கள்.

தமிழ் சினிமா
கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழ் சினிமாவை மிஸ் பண்ணுவதாகக் கூறியிருந்தார். சமீப காலமாக, அடிக்கடி கிளாமர் ஸ்டில்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் வைரலாகி வருகின்றன.

நேரா நின்னு ஒழுங்கா
செம ஸ்டைலாக அவர் பதிவிட்டுள்ள இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பதுதான் என்று கூறியுள்ளார். இதற்கும் வழக்கம் போல லைக்ஸ்களும் கமென்ட்களும் குவிந்துள்ளன. பலர் நேரா நின்னு ஒழுங்கா ஒரு போட்டோ போடுங்களேன் என்று கூறியுள்ளனர்.

பேபி டால் மாதிரி
சில ரசிகர்கள், ஆல் டைம் ஃபேவரைட் நீங்கதான், அடுத்தாப்ல என்ன தமிழ் படத்துல நடிக்கிறீங்க? என்று கேட்டுள்ளனர். சிலர் உங்க ஹேர் ஸ்டைல் சூப்பர், கண்கள் அழகு என்று வர்ணித்துள்ளனர். ஒரு சில நெட்டிசன்ஸ், நீங்க எப்பவுமே பேபி டால் மாதிரிதான் இருக்கீங்க, இந்த டிரெஸ்லயும் அப்படியேதான் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











