அது இருக்கட்டும்..முதல்ல பட்டனை போடுங்க..! தமிழில் ரிப்ளை பண்ணிய நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

By

சென்னை: ரசிகர்களின் கேள்விக்குத் தமிழில் பதில் சொன்ன நடிகையிடம் சட்டைப் பட்டனை போடுமாறு ரசிகர்கள் கூறினர்.

சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண்.

தொடர்ந்து அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாரின் திவான், அரசு, பிரஷாந்த் நடித்த வின்னர் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

சர்வர் சுந்தரம்

சர்வர் சுந்தரம்

இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து வந்த இவர், பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டனின் உறவினர். தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு வராததால் கேரக்டர் ரோலில் நடித்து வந்தார். கார்த்தியின் சகுனி, விஷாலின் ஆம்பள படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்த கிரண், சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

கிளாமர் போட்டோ

கிளாமர் போட்டோ

இவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவின. அவர் வெளியிட்டிருந்த வீடியோக்களும் பரவியது. அதற்கு ரசிகர்களும் கண்டபடி கமென்ட்களை அள்ளித் தெளித்திருந்தனர். இவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவின. அவர் வெளியிட்டிருந்த வீடியோக்களும் பரவியது. அதற்கு ரசிகர்களும் கண்டபடி கமென்ட்களை அள்ளித் தெளித்திருந்தனர்.

செல்பி புகைப்படங்கள்

செல்பி புகைப்படங்கள்

இந்நிலையில் இப்போது புதிய சில செல்பி புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மஞ்சள் நிறத்தில் அணிந்துள்ள சட்டையுடன் அவர் கிளாமராக இருக்கிறார். இந்தப் புகைப்படங்களை ஆயிரக்கணக்கானோர் லைக்ஸ் செய்துள்ளனர். நூற்றுக் கணக்கானோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். சிலர் கலாய்த்துள்ளனர்.

எனக்குப் பிடித்த ஊர்

எனக்குப் பிடித்த ஊர்

ஒரு ரசிகர், 'மேடம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா.. திமிரு பட அறிமுக பாடல் காட்சியை எங்க ஊர் காரைகுடியிலதான் எடுத்தாங்க.., அப்ப உங்களை பார்த்தேன்' என்று சொல்ல, 'அது எனக்குப் பிடித்த ஊர் என்று கூறியுள்ளார் கிரண். பிறகு சாப்பிட்டீங்களா? என்று அந்த ரசிகரிடம் கேட்டுள்ளார் . தமிழ்ல நல்லா ரிப்ளை பண்றீங்களே என்று அவர் கேட்க, கொஞ்சம் தெரியும் என்று தமிழ்ப் பாசம் காட்டியிருக்கிறார் கிரண்.

Recommended Video

Sushant singh Rajput : கண்ணீர் விட்டு அழும் பிரபல நடிகை கிரண் | FilmiBeat Tamil
வெயிட் பண்ணுங்க

வெயிட் பண்ணுங்க

இன்னொரு பாசக்கார ரசிகர், வின்னர் பார்த்ததில் இருந்து உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன். இப்பலாம் ஏன் தமிழ் படங்கள்ல நடிக்க மாட்டேங்கிறீங்க? ஐ எம் வெயிட்டிங்' என்று கேட்டுள்ளார். அதற்கு, தொடர்ந்து வெயிட் பண்ணுங்க என்று கூறியிருக்கிறார் கிரண். வேறொரு நெட்டிசன், ஜெமினி எனக்கு பேவரைட் படம் என்று சொல்ல, 'அதில் எனது முதல் டயலாக், 'எனக்கு தெரியும்' என்று கூறி அந்த ரசிகரை ஜில்லிட வைத்திருக்கிறார்.

சட்டை பட்டன்

சட்டை பட்டன்

இன்னொரு ரசிகர், உங்களை 'ஜெமினி'ல பார்த்த மாதிரி ஸ்லிம்மா பார்க்கணும் என்று சொல்லுங்க, கண்டிப்பா வெயிட் பண்ணுங்க என்று உறுதி கொடுத்திருக்கிறார் நடிகை. இன்னொருவர் திருமலை படத்துல உங்க பாட்டு வேற லெவல் என்று உருகி இருக்கிறார். மற்றொரு கலாய் ரசிகர், இதெல்லாம் சரி, முதல்ல சட்டை பட்டனை போடுங்க என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X