எனக்கு குழந்தை பிறந்துடுச்சுன்னு ரேவதி மேம் வாழ்த்தினாங்க.. அந்தளவுக்கு நோகடிச்சாங்க.. கலங்கிய கிரண்

சென்னை: நடிகை கிரண் தன்னை பற்றி பரவிய மோசமான வதந்திகள் குறித்து சமீபத்திய பேட்டியில் கலங்கிய கண்களுடன் பேசியது ரசிகர்களை உலுக்கி உள்ளது.

கவர்ச்சி கன்னியாகவே அறியப்பட்டு வந்த நடிகை கிரணின் மறுபக்கம் இப்படி சோகமயமானதாக இருக்கும் என ரசிகர்கள் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

Kiran reveals once Actress Revathi wish me for rumour babies

3 கல்யாணம் ஆகிடுச்சு, 4 குழந்தைகள் கிரணுக்கு இருக்கு என்றெல்லாம் மோசமாக வதந்திகள் தன்னைப் பற்றி பரவியதாக கிரண் கண் கலங்கிய பேசியது பலரையும் பதற வைத்துள்ளது.

ஹிட் கொடுத்தும் வாய்ப்பு வரல: தொடர்ந்து 6 ஹிட் படங்களை கொடுத்தும் திரையுலகம் என்னை ஏன் தூக்கியடித்தது என்கிற கேள்வி இன்றளவும் என் மனதில் நிறைந்திருக்கிறது. தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவுகளை நான் போட்டு வர காரணமே, நான் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறேன். நடிக்க எப்போதுமே ரெடி என்பதை அறிவிக்கத்தான். மற்றபடி வேறு எதற்காகவும் இல்லை. ஆனால், சினிமா வாய்ப்புகள் சுத்தமாக எனக்கு வராததற்கு காரணம் எனக்கே தெரியவில்லை என்றும் ஆரம்பத்திலேயே தனது சோக கதையை சொல்லி உள்ளார்.

3 கல்யாணம் ஆகிடுச்சுன்னு: நடிகை கிரணை பற்றி ஏகப்பட்ட வதந்திகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. நீங்கள் எதிர்கொண்டதிலேயே மோசமான வதந்தி என்றால் என்ன என்கிற கேள்விக்கு பதில் அளித்த கிரண் எனக்கு 3 முறை திருமணம் ஆகிவிட்டது என்றும் 4 குழந்தைகள் உள்ளனர் என்கிற வதந்தி தான் மிகவும் மோசமான வதந்தி என நான் நினைக்கிறேன் என்றார்.

எனக்கு இதுவரைக்கும் ஒருவாட்டி கூட திருமணம் ஆகவில்லை. என் அம்மா மற்றும் பிரதர் உடன் தான் இருந்து வருகிறேன். ஒரு போஸ்ட் போட்டால் கூட அம்மாவிடம் காட்டி விட்டு ஓகேன்னு சொன்னால் தான் இன்ஸ்டாவில் போஸ்ட் போடுவேன் என்றார்.

ரேவதி மேம் வாழ்த்தினாங்க: என்னைப் பற்றி கிளம்பிய ரூமரை விட அதையும் உண்மைன்னே நம்பி ஒருமுறை ஷூட்டிங்கில் என்னை பார்த்த நடிகை ரேவதி மேன் திடீரென கிட்ட வந்து ஹே கங்கிராட்ஸ் என கைகுலுக்கி வாழ்த்தினாங்க, எதுக்கு மேம்னு கேட்டா, குழந்தை பிறந்துடுச்சாமே சொல்லவே இல்லைன்னு சொன்னாங்க.. ஐயோ மேம் எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல, அது ஃபுல்லாவே ரூமர்னு சொன்னதும் அவங்க ஃபேஸே டல்லாகிடுச்சு என கிரண் அந்த பேட்டியில் தன்னை பற்றி மோசமாக வந்த வதந்திகள் குறித்து கலங்கிய கண்களுடன் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X