Kiran: எனக்கு கல்யாணமே ஆகல.. காம்ப்ரமைஸ், அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி நடிகை கிரண் பளிச்!

சென்னை: நடிகை கிரண் திருமணமே செய்துக் கொள்ளவில்லை என்றும் தப்பான நபரை காதலித்தது தான் வாழ்க்கையிலேயே தான் செய்த மிகப்பெரிய தவறு என சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.

மும்பை சிட்டியில் இருப்பது ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸான வாழ்க்கையாக இருந்தது. கோவாவுக்கு பிக்னிக் தான் வந்தேன். பின்னர், இங்கே உள்ள அமைதியை பார்த்து விட்டு இங்கேயே வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

Kiran reveals she didnt marry anyone and also never interested in adjustments

மேலும், இன்ஸ்டாகிராமில் பதிவிடும் பிகினி போட்டோக்களை பார்த்து விட்டு என்னை வேறமாதிரி ஜட்ஜ் பண்ணிடுறாங்க, நான் அந்த மாதிரியான ஆளே கிடையாது என ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டாக பேசி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார் கிரண்.

கோவாவில் வீடு வாங்கிய கிரண்: நடிகை கிரண் தொடர்ந்து கோவாவிலேயே இருப்பது போல இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போட்டு வந்த நிலையில், கோவாவிலேயே வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டதாக லேட்டஸ்ட் பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் மட்டுமின்றி மேலும், சில பிரபலங்களும் கோவாவில் வீடு வாங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

கல்யாணமே ஆகல: நடிகை கிரணுக்கு திருமணமாகி விவாகரத்து ஆனதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தான் யாரையும் திருமணம் செய்துக் கொள்ளவே இல்லை என்பதை அவரே தெளிவுப்படுத்தி உள்ளார். மேலும், தான் இப்போதும் சிங்கிள் தான் என்றாலும், சினிமாவை தவிர வேறு யாருடனும் மிங்கிள் ஆக விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

பிகினி அணிந்தால் தப்பா: என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி போட்டோக்களை பதிவிட்டு வருவதை பார்த்து, உங்க ரேட் என்ன? நீங்க தப்பான பிசினஸ் பண்றீங்களா என தரக்குறைவாக பலரும் கேட்டு வருகின்றனர். நான் நல்ல குடும்பத்தில் பிறந்த பொண்ணு, நான் தப்பான வழியில் செல்ல மாட்டேன். பிகினி அணிவது எனக்குப் பிடிக்கும். 15 வருஷத்துக்கு முன்னாடி வின்னர் படத்திலேயே அணிந்தவள் நான், பிகினி அணிந்தால் தப்பா, இப்போ எந்த நடிகை பிகினி அணியாமல் இருக்காங்க சொல்லுங்க என தடாலடியாக பேசியுள்ளார்.

அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு நோ: தொடர்ந்து 5 பெரிய ஹிட் படங்களை கொடுத்த என்னை ஏன் அதன் பின்னர் சினிமா துறையில் யாருமே நடிக்க கூப்பிடலன்னு எனக்கே தெரியல. காம்ப்ரமைஸ், அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு நான் ஆள் கிடையாது. இப்பவும் சினிமாவில் நடிக்க ரெடியாக இருக்கிறேன். ஆனால், லஞ்ச், டின்னர் என மத்தத்துக்கு யாரும் கூப்பிடாதீங்க என சொல்லி உள்ளார் கிரண்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X