லியோவில் நடிச்சிருக்கேன்.. பொசுக்குன்னு சொன்ன கிரண்.. ஆடிப்போன ரசிகர்கள்.. பிக் பாஸுக்கு வராரா?
சென்னை: ஜெமினி, வில்லன், அன்பே சிவம், திருமலை, நியூ, வின்னர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள நடிகை கிரண் விஷாலின் ஆம்பள படத்திற்கு பிறகு சினிமாவை விட்டே விலகியது ரசிகர்களை அப்செட் ஆக்கியது.
சீனியர் நடிகையாக இன்னொரு ரவுண்டு வருவார் கிரண் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் வேறு விதமான போட்டோக்களை போட்டுத் தாக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் கிரண்.

இந்நிலையில், தனது லேட்டஸ்ட் பேட்டியில் விஜய்யின் லியோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன் எனக் கூறி விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளார்.
காதலால் தொலைந்த சினிமா வாழ்க்கை: நடிகை கிரண் டாப் ஹீரோயினாக விக்ரம், அஜித், கமல், விஜய் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஒருத்தரை உயிருக்கு உயிராக காதலித்து ஏமாந்த நிலையில், சினிமாவில் இருந்து அப்படியே காணாமல் போய் விட்டார்.
அதன் பின்னர் நடிகை கிரணுக்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. பிரசாந்தின் வின்னர் படத்தில் நடித்த கிரண் அதன் பின்னர், பல ஆண்டுகள் கழித்து விஷாலின் ஆம்பள படத்தில் ஆன்டி கதாபாத்திரத்தில் நடித்து ஷாக் கொடுத்த கிரண் அந்த படத்திற்கு பிறகு எந்தவொரு படத்திலும் நடிக்கவே இல்லை.
லியோவில் இருக்கேன்: நடிகை கிரணை பேட்டி எடுத்த தொகுப்பாளர் ஏதாவது ஒரு ரூமர் உங்களை பற்றி நீங்களே சொல்லுங்க என்றதும், தமிழ் சினிமாவில் 4 படங்களில் கமிட் ஆகி உள்ளேன் என்று சொல்லி சிரித்த நடிகை கிரண் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்திலும் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் செய்துள்ளேன் என குண்டை தூக்கிப் போட்டுள்ளார். மேலும், நடிகர் விஜய் எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு சூப்பர் என ஃபிளையிங் கிஸ் எல்லாம் விஜய்க்கு கொடுத்து விட்டார் கிரண்.
உண்மையாகவே கிரண் லியோ படத்தில் நடித்துள்ளாரா அல்லது அவர் சொன்னது ரூமரா என்பது அந்த தொகுப்பாளருக்கே தெரியாதபடி குழப்பி விட்டுள்ளார் கிரண். திருமலை படத்தில் "வாடியம்மா ஜக்கம்மா" பாடலுக்கு ஆட்டம் போட்டது போல "நான் ரெடி தான்" பாடலில் விஜய்யுடன் கிரண் ஆட்டம் போடுவாரா சர்ப்ரைஸா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பிக் பாஸ் வருகிறாரா: திடீரென கிரண் யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக் கொடுத்துள்ள நிலையில், பிக் பாஸ் சீசன் 7ல் கலந்துக் கொள்கிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்தில் ஹீரோயினாக நடித்த கிரண் பல சீசன்களாகவே வருவார் என எதிர்பார்க்கப்பட்டும் இன்னமும் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமைக்க பிடிக்கும் என கிரண் சொல்லி உள்ள நிலையில், குக் வித் கோமாளி அடுத்த சீசனுக்கு வாங்க என ரசிகர்களும் கெஞ்சி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











