நெசம்தானா இதெல்லாம்..? அப்படி இப்படி கசியும் ஆச்சரிய லிஸ்ட்.. 'பிக்பாஸ் 4' சீசனில் சூரியாதேவி?

By

சென்னை: சமீபத்தில் பரபரப்பை கிளப்பிய சூரியா தேவி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Shivani, Darshan, Reshma Trends of Lockdown • Motta Maadi Photoshoot

இந்தியில் ஒளிபரப்பாகி, ஏராளமான ரசிகர்களை வசப்படுத்திய டிவி நிகழ்ச்சி பிக்பாஸ்.

இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

சல்மான் கான்

சல்மான் கான்

இந்தியில் இந்த நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். 4-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 4 ஆவது சீசன், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தாமதமானது.

நடிகர் நாகர்ஜுனா

நடிகர் நாகர்ஜுனா

ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த முறை நடத்தப்படுமா? என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4-க்கான அறிவிப்பு, சில தினங்களுக்கு முன் வெளியானது. ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் சீசன் 4 குறித்த, புதிய புரமோ வெளியாகி வருகிறது. சமீபத்தில் வெளியான புரமோவில் நாகார்ஜுனா மூன்று கெட்டப்களில் தோன்றினார்.

தெலுங்கு பிக்பாஸ்

தெலுங்கு பிக்பாஸ்

வயதானவர், இளைஞர், நடுத்தர வயதுக்காரர் ஆகிய தோற்றங்களில் அவர் வரும் அந்த புரமோ, ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. வரும் 30 ஆம் தேதி முதல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்று கூறப்படுகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி
வருகின்றன.

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

நடிகைகள் சுனைனா, அதுல்யா, கிரண், ரம்யா பாண்டியன், வித்யூலேகா ஆகியோர் இதில் இடம்பெற உள்ளதாகக் கூறப்பட்டது. இதில் தான் பங்கேற்கவில்லை என்று நடிகை சுனேனா மறுத்திருந்தார். 'எந்த ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்க விரும்பவில்லை. அதில் பங்கேற்றால், நான் ஒப்பதமாகி உள்ள படங்களை யார் முடித்துக் கொடுப்பார்கள்? என்று கேட்டிருந்தார்.

சூரியாதேவி

சூரியாதேவி

இந்நிலையில், புதிய லிஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒருவர், நடிகை வனிதா விஜயகுமார் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சூரியாதேவி! மேலும், முன்னாள் ஹீரோயின் கிரண், நடிகை சனம் ஷெட்டி, ஷிவானி நாயர், 'நீயா நானா' கோபிநாத், சர்ச்சை நடிகைக்கு எதிராக பரபரப்பாக பேசிய ஜோ மைக்கேல், நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை ஆகியோர் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வ தகவல் வெளிவரவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X