நியூ.. நியூ.. நியூ...இன்று முதல் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவகாமி மாமி பாடலுடன் நியூ.. நியூ.. நியூ..என்று பத்திரிக்கைகளில் விளம்பரம் தந்திருந்தார் நியூ படத்தின் இயக்குனர்-கம்-ஹீரோ எஸ்.ஜே. சூர்யா.பயங்கர ஆபாசம் என்ற பிரச்சாரம் பெருக்கெடுத்த நிலையில் நியூ படத்தை பயத்துடன் தான் ரிலீஸ் செய்தார்சூர்யா. படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துவிட, அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணும் நோக்கத்தில் ரூ. 20லட்சம் செலவு செய்து கிரணை சுடுதண்ணியில் முக்கப்பட்ட பிராய்லர் கோழி மாதிரி உரித்து மேலே, கீழேகொஞ்சம் டிரஸ் மாட்டிவிட்டு ஒரு டமுக்குடப்பா பாடலை எடுத்து முடித்தார்.தொப்பையைக் குறைத்து சிக் ஆகி விட்ட கிரணுக்கும், தனது புது உடல் வாகை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டஇந்தப் பாடல் வசதியாக அமைந்துவிட, புகுந்து விளையாடிவிட்டார்.பாடலை எடுத்து முடித்து சூட்டோடு சூடாக, அதை அப்படியே படத்தில் சேர்ப்பதற்காக சென்சார் போர்டிடம்போக, வசமாக மாட்டிக் கொண்டார் சூர்யா. பாடல் மிக ஆபாசம் என்று கூறி சென்சார் போர்ட் உறுப்பினர் ரிஜெக்ட்செய்ய, வாய்த் தகராறு மூண்டது.இதையடுத்து தன் மீது செல்போனை எறிந்ததாக சூர்யா மீது அவர் போலீசில் செய்ய, அந்தப் புகாரை சூர்யாஅடியோடு மறுத்தார்.இதையடுத்து புது பாடலை படத்தில் இணைக்க அனுமதி கோரி மும்பையில் உள்ள சென்சார் போர்டுதலைமையகத்துக்குப் போனார் சூர்யா.அவர்களோ கட்..கட்..கட் என 16 வெட்டுக்களைப் போட்டு, இப்ப இந்த பாடலை படத்தில் சேர்த்துக் கொள்ளலாம்என்று அனுமதி தர நொந்து போனார் சூர்யா. வெட்டிக் குதறப்பட்டு தனது கையில் கொடுக்கப்பட்ட அந்தபிலிம்ரோலை, ஒரு வழியாக எடிட்டிங்கில் பிளாஸ்திரி போட்டு ஒட்டி மீண்டும் அதை பாடலாக்கினார்.எப்படியோ வெட்டுக்களோடு ஒரு வழியாய் பாடலுக்கு அனுமதி கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் தான் நாம் முதல்பாராவில் சொன்ன விளம்பரத்தை இன்று பத்திரிக்கைகளுக்குத் தந்திருந்தார்.ஆனால், அந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. கிரணை வைத்து எடுக்கப்பட்டுள்ள அந்த பாடல் ஆபாசத்தில்உச்சம் என்று சொல்லி, அதற்கு தடை விதிக்கக் கோரி பெண் வழக்கறிஞர் அருண்மொழி உயர் நீதிமன்றத்தில் மனுபோட்டார்.இதனை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கற்பக விநாயகம் ஆகியோர் அடங்கிய டிவிஷன்பெஞ்ச் இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய தணிக்கைக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.மேலும் பாடலை படத்தில் சேர்க்கவும், அதை வெளியில் ஒலி, ஒளிபரப்பவும் தடை விதித்துவிட்டனர்.இன்றுடன் நியூ ரிலீசாகி 50வது நாளாகிறது. இந்த ஒட்டு பிளாஸ்திரி பாடலும் சேர்க்கப்பட்டால் இன்னும் சிலவாரங்கள் படத்தை இன்னும் பல வாரங்கள் ஓட்டிவிடலாம் என்ற கனவில் இருந்தார் சூர்யா. அதற்கு சிக்கல்வந்துவிட்டது.படத்தை ரிலீஸ் செய்த சில நாட்களில் வசூலை வாருகிறது நியூ என சூர்யா விளம்பரம் தர, அவரது வீட்டுக்குஇன்கம்டாக்ஸ்காரர்கள் காலையில் போய் காலிங் பெல் அழுத்தியது நினைவுகூறத்தக்கது.நான் சினிமா, சூட்டிங், கதைன்னு இருக்கிற ஆள், எனக்கு பணம், கணக்கு வழக்கு எல்லாம் சரியா வச்சுக்கத்தெரியாது. எவ்வளவு டாக்ஸ் கட்டணும்னு சொல்லுங்க.. கட்றேன் என்று சூர்யா ஓப்பனாகவே உள்ளதைச்சொல்லிவிட, அவரது நேர்மையைப் பாராட்டிய அதிகாரிகள், வரியை வாங்கிக் கொண்டு திரும்பினார்கள்.இன்கம்டாக்ஸ்காரர்களிடம் சிக்கியும் சூர்யாவுக்கு சேட்டை குறைந்தபாடில்லை. இன்று கொடுத்துள்ள நியூ படவிளம்பரத்தின் ஒரு ஓரத்தில் அவர் எழுதியுள்ள கவிதை:நினைத்ததை முடிப்பவன்நான் தான்பணத் தோட்டத்தில்நடப்பவன் நான் தான்அதன் காரணம்தெய்வத் தாய் தான்மகா லொள்ளு பிடிச்ச ஆள் என்பார்களே.. அது இவர் தான்.

By Staff
இன்று முதல் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவகாமி மாமி பாடலுடன் நியூ.. நியூ.. நியூ..

என்று பத்திரிக்கைகளில் விளம்பரம் தந்திருந்தார் நியூ படத்தின் இயக்குனர்-கம்-ஹீரோ எஸ்.ஜே. சூர்யா.

பயங்கர ஆபாசம் என்ற பிரச்சாரம் பெருக்கெடுத்த நிலையில் நியூ படத்தை பயத்துடன் தான் ரிலீஸ் செய்தார்சூர்யா. படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துவிட, அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணும் நோக்கத்தில் ரூ. 20லட்சம் செலவு செய்து கிரணை சுடுதண்ணியில் முக்கப்பட்ட பிராய்லர் கோழி மாதிரி உரித்து மேலே, கீழேகொஞ்சம் டிரஸ் மாட்டிவிட்டு ஒரு டமுக்குடப்பா பாடலை எடுத்து முடித்தார்.

தொப்பையைக் குறைத்து சிக் ஆகி விட்ட கிரணுக்கும், தனது புது உடல் வாகை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டஇந்தப் பாடல் வசதியாக அமைந்துவிட, புகுந்து விளையாடிவிட்டார்.

பாடலை எடுத்து முடித்து சூட்டோடு சூடாக, அதை அப்படியே படத்தில் சேர்ப்பதற்காக சென்சார் போர்டிடம்போக, வசமாக மாட்டிக் கொண்டார் சூர்யா. பாடல் மிக ஆபாசம் என்று கூறி சென்சார் போர்ட் உறுப்பினர் ரிஜெக்ட்செய்ய, வாய்த் தகராறு மூண்டது.

இதையடுத்து தன் மீது செல்போனை எறிந்ததாக சூர்யா மீது அவர் போலீசில் செய்ய, அந்தப் புகாரை சூர்யாஅடியோடு மறுத்தார்.

இதையடுத்து புது பாடலை படத்தில் இணைக்க அனுமதி கோரி மும்பையில் உள்ள சென்சார் போர்டுதலைமையகத்துக்குப் போனார் சூர்யா.

அவர்களோ கட்..கட்..கட் என 16 வெட்டுக்களைப் போட்டு, இப்ப இந்த பாடலை படத்தில் சேர்த்துக் கொள்ளலாம்என்று அனுமதி தர நொந்து போனார் சூர்யா. வெட்டிக் குதறப்பட்டு தனது கையில் கொடுக்கப்பட்ட அந்தபிலிம்ரோலை, ஒரு வழியாக எடிட்டிங்கில் பிளாஸ்திரி போட்டு ஒட்டி மீண்டும் அதை பாடலாக்கினார்.

எப்படியோ வெட்டுக்களோடு ஒரு வழியாய் பாடலுக்கு அனுமதி கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் தான் நாம் முதல்பாராவில் சொன்ன விளம்பரத்தை இன்று பத்திரிக்கைகளுக்குத் தந்திருந்தார்.

ஆனால், அந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. கிரணை வைத்து எடுக்கப்பட்டுள்ள அந்த பாடல் ஆபாசத்தில்உச்சம் என்று சொல்லி, அதற்கு தடை விதிக்கக் கோரி பெண் வழக்கறிஞர் அருண்மொழி உயர் நீதிமன்றத்தில் மனுபோட்டார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கற்பக விநாயகம் ஆகியோர் அடங்கிய டிவிஷன்பெஞ்ச் இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய தணிக்கைக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் பாடலை படத்தில் சேர்க்கவும், அதை வெளியில் ஒலி, ஒளிபரப்பவும் தடை விதித்துவிட்டனர்.

இன்றுடன் நியூ ரிலீசாகி 50வது நாளாகிறது. இந்த ஒட்டு பிளாஸ்திரி பாடலும் சேர்க்கப்பட்டால் இன்னும் சிலவாரங்கள் படத்தை இன்னும் பல வாரங்கள் ஓட்டிவிடலாம் என்ற கனவில் இருந்தார் சூர்யா. அதற்கு சிக்கல்வந்துவிட்டது.

படத்தை ரிலீஸ் செய்த சில நாட்களில் வசூலை வாருகிறது நியூ என சூர்யா விளம்பரம் தர, அவரது வீட்டுக்குஇன்கம்டாக்ஸ்காரர்கள் காலையில் போய் காலிங் பெல் அழுத்தியது நினைவுகூறத்தக்கது.

நான் சினிமா, சூட்டிங், கதைன்னு இருக்கிற ஆள், எனக்கு பணம், கணக்கு வழக்கு எல்லாம் சரியா வச்சுக்கத்தெரியாது. எவ்வளவு டாக்ஸ் கட்டணும்னு சொல்லுங்க.. கட்றேன் என்று சூர்யா ஓப்பனாகவே உள்ளதைச்சொல்லிவிட, அவரது நேர்மையைப் பாராட்டிய அதிகாரிகள், வரியை வாங்கிக் கொண்டு திரும்பினார்கள்.

இன்கம்டாக்ஸ்காரர்களிடம் சிக்கியும் சூர்யாவுக்கு சேட்டை குறைந்தபாடில்லை. இன்று கொடுத்துள்ள நியூ படவிளம்பரத்தின் ஒரு ஓரத்தில் அவர் எழுதியுள்ள கவிதை:

நினைத்ததை முடிப்பவன்
நான் தான்
பணத் தோட்டத்தில்
நடப்பவன் நான் தான்
அதன் காரணம்
தெய்வத் தாய் தான்

மகா லொள்ளு பிடிச்ச ஆள் என்பார்களே.. அது இவர் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X