கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம்...ஹீரோ யாருன்னு தெரியுமா ?
சென்னை : தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி என பன்முகத்தன்னை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். அவரின் மனைவி கிருத்திகா உதயநிதி, வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.
முழு நீள காமெடி படமாக உருவாக்கப்பட்ட வணக்கம் சென்னை படத்தில் மிர்சி சிவா, பிரியா ஆனந்த், சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து 2018 ல் காளி படத்தை இயக்கினார்.

சமீப நாட்களாக கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம் பற்றி பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது அவரின் அடுத்த படம் மற்றும் அதில் ஹீரோ யார் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ட்விட்டரில் ரசிகர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது கிருத்திகா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி கிருத்திகாவின் புதிய படத்தின் ஹீரோ, காளிதாஸ் ஜெயராம். இவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளாராம்.
தன்யா ரவிச்சந்திரன், இதற்கு முன் விஜய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தில் நடித்துள்ளார். கிருத்திகாவின் புதிய படத்திற்கு ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளாராம். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











