பிக் பாஸ் விக்ரமன் காதல் வலை வீசியது எல்லாம் காசுக்காகத்தான்.. விளக்கத்துக்கு பதிலடி கொடுத்த கிருபா!
சென்னை: வழக்கறிஞர் கிருபா முனுசாமி தனக்கு அளித்த காதல் கடிதத்தை வெளிப்படையாக வெளியிட்ட பிக் பாஸ் விக்ரமன் அவரிடம் வாங்கிய 12 லட்சம் ரூபாய் பணத்தையும் கொடுத்து விட்டதாக ஸ்க்ரீன் ஷாட் வெளியிட்டு நீண்ட விளக்கத்தை நேற்று அளித்திருந்தார்.
இந்நிலையில், விக்ரமன் விளக்கத்துக்கு கிருபா முனுசாமி பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனக்கு காதல் வலை வீசி தேனே மானே ஐ லவ்யூ என்றெல்லாம் சொன்னது எல்லாமே காசுக்காகத்தான் என்பதை புரிந்துக் கொண்டேன் என விளாசி உள்ளார் கிருபா முனுசாமி.
காசு வாங்கிய விக்ரமன்: கிருபா முனுசாமியிடம் தனது தேவைக்காக 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதனை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திருப்பித் தந்து விட்டதாகவும் விக்ரமன் விளக்கம் அளித்துள்ளார்.

இதையறிந்த நெட்டிசன்கள் அப்போ அந்த பெண்ணிடம் காசு வாங்கியது உண்மை தான். 12 லட்சம் ரூபாயை உன்னை நம்பி அந்த பெண் எந்த நம்பிக்கையில் கொடுத்தார், நீ காசு வாங்க என்னவெல்லாம் சொல்லியிருப்ப என நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்திலேயே விளாசி உள்ளனர். இந்நிலையில், கிருபா முனுசாமி தனது தரப்பு விளக்கத்தையும் கொடுத்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.
காசு வாங்க காதல்: தன்னிடம் மட்டுமின்றி பல பெண்களிடமும் விக்ரமன் இப்படி கட்சியில் சேர போகிறேன் காசு வேண்டும் என வாங்கி மோசடி செய்துள்ளது அம்பலமாகி உள்ளது என்றும் தன்னிடம் காசு வாங்கவே அவர் தேனே மானே ஐ லவ் யூ என்றெல்லாம் காதல் வலை விரித்து இருக்கிறார் என்பதே எனக்கு தாமதமாகத் தான் புரிந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் விக்ரமனின் சுயரூபம் தெரிந்த பின்னர், அவருக்கு எதிராக போலீஸில் புகார் அளிக்கப் போகிறேன் என முடிவெடுத்ததும் வந்து என்னிடம் கண்ணீர் விட்டு கெஞ்சி, லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழலாம் என்றார். ஆனால், இப்படிப்பட்ட போலி ஆசாமியிடம் அந்த வாழ்க்கையை வாழ்ந்தால் மேலும், சிக்கல் தான் என்று நினைத்து தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் எனக்கான நீதி கிடைக்கும் என முறையிட்டேன் என்றுள்ளார்.
திருமாவளவன் அமைதி: திருமாவளவன் எனக்கு சாதகமாகத் தான் பேசுவார் என்று ஒரு கட்டத்தில் விக்ரமன் என்னை மிரட்டவே ஆரம்பித்தார். 5 பேர் கொண்ட விசாரணைக் குழு எல்லாம் வைப்பதாக சொன்னதும் நான் நம்பி அமைதியானேன்.

ஆனால், அந்த விசாரணை முடிந்து பல நாட்கள் ஆகியும் எந்தவொரு முடிவையும் சொல்ல வேண்டாம் என அமைதியாக உள்ளனர் என்றும் தனக்கான நியாயத்தை அந்த கட்சி வழங்கும் என்றும் விக்ரமன் அந்த கட்சியில் நேற்று வந்து ஒட்டிக் கொண்ட ஒரு நபர் தான். நான் அந்த கட்சியின் அபிமானியாக பல ஆண்டுகள் இருந்து வருகிறேன் என்றும் வழக்கறிஞர் கிருபா முனுசாமி கூறியுள்ளார்.
காதல் சாட்டிங்: நான் மட்டுமே ஒரு தலையாக விக்ரமனை காதல் செய்தேன் என்றும் அவர் என்னிடம் அப்படி பழகவே இல்லை என்கிறாரே, நான் வெளியிட்ட சில வாட்ஸப் சாட்களை பார்த்தாலே அவர் எந்தளவுக்கு என்னுடன் காதல் சாட்டிங்கில் ஈடுபட்டு இருந்தார் என்பது தெரியவரும் என்றார்.
மேலும், 12 லட்சம் ரூபாய் மட்டுமல்ல, அதற்கு மேலும், என் பணமும் பொருட்களும் விக்ரமனிடம் உள்ளன என்றும் கிருபா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











