காளிதாஸ் ஜெயராம், கிருத்திகா உதயநிதி திடீர் சந்திப்பு... படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்!

சென்னை : தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் மிகப் பிரபலமான இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது.

சினிமாவில் வளரும் போதே நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சவாலான கதாபாத்திரங்களில் நடித்துவரும் காளிதாஸ் ஜெயராம் இப்பொழுது கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் காளிதாஸ் ஹீரோவாக நடிக்க இருக்க திடீரென படக்குழுவுடன் கிருத்திகா உதயநிதியை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அறிமுகப் படமே தமிழில்

அறிமுகப் படமே தமிழில்

மிகப் பிரபலமான நடிகரின் மகனாகவே இருந்தாலும் மிகவும் தன்மையுடன் சமத்துப் பிள்ளையாக வளர்ந்து வரும் காளிதாஸ் ஜெயராமை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான காளிதாஸ் மீன் குழம்பும் மண் வாசனையும் படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அறிமுகப் படமே தமிழில் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தரவில்லை. அதையடுத்து மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்த காளிதாஸ் மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பிக்க அடுத்தடுத்து இரண்டு ஆந்தாலஜி திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். புத்தம் புது காலையை தொடர்ந்து வெளியான பாவக் கதைகள் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்று தந்துள்ளது. இளம் நடிகர்கள் பலரும் நடிக்க தயங்கும் திருநங்கை கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்த காளிதாஸ் ஜெயராம் இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் தமிழில் ஒப்பந்தமாகி வருகிறார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தங்கம் பகுதியில் சதார் என்ற பெயரில் திருநங்கையாக அட்டகாசமாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

தப்பு பண்ணிட்டேன்

தப்பு பண்ணிட்டேன்

சமீபத்தில் கூட சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவான தப்பு பண்ணிட்டேன் ஆல்பம் பாடலில் காளிதாஸ் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். காளிதாஸ் மற்றும் மேகா ஆகாஷ் ஏற்கனவே ஒரு பக்கா கதை என்ற படத்தில் இணைந்து நடித்து இருந்தனர். இரண்டாவது முறையாக தப்பு பண்ணிட்டேன் பாடலில் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு காட்சி விருந்து அளித்திருந்தனர். மாஸ்டர் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தனது கலையுலக குருவான கமல்ஹாசனை இயக்குவது உறுதியாகி உள்ளது. அதன்படி உருவாகி வரும் இப்படத்திற்கு விக்ரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக இல்லை கேங்ஸ்டாரா என்ற குழப்பம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் இருக்க அடுத்தடுத்து அட்டகாசமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இதில் வில்லன்களாக நடிக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் பாவக் கதைகள் சதார் மட்டுமே இரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்க இப்பொழுது லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்க இருப்பதால் இப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படுதோல்வி

படுதோல்வி

இந்த நிலையில் பிரபல இளம் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் காளிதாஸ் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆகி உள்ளார். வணக்கம் சென்னை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக வெற்றி வாகை சூடிய கிருத்திகா உதயநிதி நடிகர் உதயநிதியின் மனைவி என்பது பலரும் அறிந்ததே. வணக்கம் சென்னை மிகப் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க கதாநாயகியாக பிரியா ஆனந்த செம க்யூட்டாக நடித்திருப்பார். சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லாத க்யூட்டான காதல் கதையாக வணக்கம் சென்னை வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. வணக்கம் சென்னையை தொடர்ந்து கிருத்திகா காளி என்ற வித்தியாசமான படத்தை இயக்கினார். முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்கும் சம்பந்தமே இருக்கக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்த கிருத்திகா இந்த படத்தில் விஜய் ஆண்டனியை வேறு கோணத்தில் காட்டி இருந்தார். நிகழ்காலம் மற்றும் முன் ஜென்மத்தை மையப்படுத்தி வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மாறாக படுதோல்வியை சந்தித்தது. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்திருந்தனர்.

திடீர் சந்திப்பு

திடீர் சந்திப்பு

காளி தோல்வி பெற்றதற்குப் பிறகு அடுத்த கதையை பக்காவாக தயார் செய்ய கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்ட கிருத்திகா இப்பொழுது தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்க தயாராகி உள்ளார்.இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது . ரொமான்டிக் காதலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் காளிதாஸ் ஹீரோவாக நடிக்க ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். தன்யா ரவிச்சந்திரன் விஜய் சேதுபதியின் கருப்பன் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த படத்தை சீஃயீஸ்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் படக்குழுவினர் இயக்குனர் கிருத்திகா உதயநிதியை திடீரென சந்தித்து பேசியுள்ளனர் . மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த திடீர் சந்திப்பில் படப்பிடிப்பு பற்றிய பல ஆலோசனைகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எனவே மிக விரைவில் ஒரு நற்செய்தியை கிருத்திகா உதயநிதி இடமிருந்து எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த சந்திப்பிற்கு பிறகு படக்குழுவுடன் கிருத்திகா உதயநிதி எடுத்துக்கொண்ட க்ரூப் போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X