ஹீரோவாக ஆசைப்படும் இன்பன் உதயநிதி.. அம்மா கிருத்திகா உதயநிதி என்ன சொன்னாங்க தெரியுமா?
சென்னை: உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் ஹீரோவாக மாறிவிடவா என தனது விருப்பத்தை அம்மா கிருத்திகாவிடம் சொல்ல, அவர் அதற்கு என்ன சொன்னார் என்கிற பேட்டி தற்போது டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்குநராக தமிழ் சினிமாவில் அசத்தி வருகிறார்.
கடந்த 2013ம் ஆண்டு வணக்கம் சென்னை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அவர், தற்போது பேப்பர் ராக்கெட் எனும் வெப்சீரிஸை இயக்கி அதனை ஜி5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளார்.

கிருத்திகா உதயநிதி
சிவா, பிரியா ஆனந்த், சந்தானம் நடிப்பில் அனிருத் இசையில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. 2018ம் ஆண்டு விஜய் ஆண்டனியை வைத்து காளி எனும் படத்தை இயக்கிய அவர், தற்போது காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி உள்ள பேப்பர் ராக்கெட் எனும் வெப்சீரிஸை இயக்கி உள்ளார். விரைவில் ஜி5 ஓடிடி தளத்தில் அந்த வெப்சீரிஸ் வெளியாக உள்ளது.

பீஸ்ட் படம் பார்த்த இன்பன்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸ் பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் பேசியுள்ளார். மகன் இன்பன் கால்பந்தாட்டத்தில் ஆர்வத்துடன் இருந்து வரும் நிலையில், சமீப காலமாக தமிழ் சினிமாக்களை பார்க்க ஆரம்பித்துள்ளார் என கிருத்திகா கூறினார். அதிகாலை 4 மணிக்கெல்லாம் தியேட்டரில் படம் போடுவாங்களான்னு கேட்டு, பீஸ்ட் படத்துக்கு போயிட்டு வந்தார் என்றார்.

நான் வேணா நடிக்கட்டா
டான் படத்தில் சிவகார்த்திகேயன் கேட்பது போல, கிருத்திகா உதயநிதியிடம் நான் வேணா சினிமாவில் நடிக்கட்டுமா என இன்பன் கேட்டதற்கு, அது சும்மா ஈஸியான வேலை இல்லை. அதற்கும் ரொம்ப கஷ்டப்படணும். பிளஸ் 2 முடிச்சிருகீங்க, கல்லூரி படிப்பையெல்லாம் முடிங்கன்னு சொல்லிட்டேன் என்றார். ஆனால், குழந்தைகளை ரொம்ப கன்ட்ரோல்லாம் பண்ண மாட்டேன். அவர்கள் என்னவாக விரும்புகிறார்களோ அதுவாக வரட்டும் என விட்டு விடுவேன். அடிக்கடி சும்மா வெறுப்பேற்றத் தான் இப்படியெல்லாம் அவர் பேசுவார் என கூறியுள்ளார் கிருத்திகா.

பைசெப்ஸ் போட்டோ
சமீபத்தில் மகன் இன்பனின் பைசெப்ஸ் போட்டோவை ஷேர் செய்து உதயநிதி ஸ்டாலின் பூரிப்பு அடைந்திருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு டிரெண்டானது. ஸ்போர்ட்ஸ் பர்சனாக உருவாகி வரும் இன்பநிதியும் கூடிய விரைவில் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர். அவரை ஹீரோவாக்கவும் சில இயக்குநர்கள் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்னால செய்ய முடியாததை மாரி செய்றாரு
உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். அதை பற்றி சொல்லுங்களேன் என்கிற கேள்விக்கு, எதையாவது ரிவீல் பண்ணா மாரி செல்வராஜ் எனக்கு போன் போட்டுத் திட்டுவாரு, நல்லா பிழிஞ்சி எடுக்குறாருன்னு மட்டும் கேள்விப் பட்டேன். என்னால பண்ண முடியாதத அவர் பண்றாரேங்கிற சந்தோஷம் மட்டும்தான் என செம ஜாலியாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications