கிருத்திகா உதயநிதி அடுத்த படத்தோட டைட்டிலை தெரிஞ்சுக்கணுமா... இன்னும் சில மணிநேரம் காத்திருங்க!

சென்னை : நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி. இவர் சிவா நடிப்பில் வணக்கம் சென்னை மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் காளி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது காளிராம், தான்யா நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.

டைரக்டர் கிருத்திகா உதயநிதி

டைரக்டர் கிருத்திகா உதயநிதி

வணக்கம் சென்னை, காளி படங்களை இயக்கி ரசிகர்களை கட்டிப் போட்டவர் கிருத்திகா உதயநிதி. இவர் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதியின் மனைவி. குறிப்பாக இவரது இயக்கத்தில் கடந்த 2013ல் வெளியான வணக்கம் சென்னை படம் ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது.

சிவாவின் வணக்கம் சென்னை படம்

சிவாவின் வணக்கம் சென்னை படம்

இதில் சிவா, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்திருந்தனர். படத்தின் பாடல்கள் அனிருத் இசையில் சிறப்பான வரவேற்பை பெற்றது. படமும் சூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து விஜய் ஆன்டணி நடிப்பில் காளி படத்தை இயக்கினார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

புதிய படத்தை இயக்கும் கிருத்திகா

புதிய படத்தை இயக்கும் கிருத்திகா

இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக படங்கள் எதையும் இயக்காமல் இருந்தார் கிருத்திகா. இந்நிலையில் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் கிருத்திகா. படத்தில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், ஹீரோ, ஹீரோயின்களாக ஒப்பந்தமாகியுள்ளனர். இதனிடையே இந்த தருணத்திற்காகதான் தான் காத்திருந்ததாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டைட்டில், பாடல் வெளியீடு

டைட்டில், பாடல் வெளியீடு

இவரது இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் முதல் பாடல் இன்று இரவு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் கேப்ஷன் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனது முந்தைய இரு படங்களையும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களாக கொடுத்த அவர், இந்தப் படத்தையும் வெற்றிப் படமாக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

சமூக பணிகளில் கிருத்திகா

சமூக பணிகளில் கிருத்திகா

தனது கணவருடன் இணைந்து அவரது தயாரிப்புப் பணிகளிலும் சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் கிருத்திகா. கழிவறைக்கான இவரது சமீபத்திய விழிப்புணர்வு வீடியோ மிகுந்த வைரலானது. திமுக தொண்டர்களும் இந்த வீடியோவால் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X