பீஸ்ட் படத்தோட FDFS கண்டிப்பா பார்ப்பேன்... கிருத்திகா உதயநிதி பரபரப்பு!
சென்னை : வணக்கம் சென்னை, காளி படங்களை இயக்கியதன் மூலம் கோலிவுட்டில் கவனம் ஈர்த்தவர் கிருத்திகா உதயநிதி. இவர் நீண்ட நாட்களாக அடுத்தப்படத்தை இயக்காமல் இருந்த நிலையில் தற்போது தனது பேப்பர் ராக்கெட் சீரிசை இயக்கி முடித்துள்ளார்.

நடிகர் உதயநிதி
நடிகர் உதயநிதி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளராகவும் பல படங்களை நேரடியாக தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை தமிழில் வெளியிட்டு வருகிறார்.

டைரக்டர் கிருத்திகா உதயநிதி
இந்நிலையில் இவரது மனைவி கிருத்திகா உதயநிதியும் சிறப்பான டைரக்டராக அறியப்படுகிறார். இவரது இயக்கத்தில் சிவா, பிரியா ராமன் நடித்திருந்த வணக்கம் சென்னை படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. காமெடி மற்றும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் வெளியானது.

வெப் தொடரை இயக்கும் கிருத்திகா
முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் கிருத்திகா. இதையடுத்து விஜய் ஆன்டணி நடிப்பில் இவர் இயக்கிய காளி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருந்த கிருத்திகா தற்போது வெப் தொடரை இயக்கி முடித்துள்ளார்.

பேப்பர் ராக்கெட் வெப் தொடர்
நேற்றைய தினம் இதற்கு பேப்பர் ராக்கெட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் காளிதாஸ் ஜெயராமன், தன்யா ரவிசந்திரன், பூர்ணிமா பாக்கியராஜ், காளி வெங்கட், கருணாகரன், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெப் தொடராக உருவாக்க காரணம்
இந்த தொடரின் முதல் பார்வை மற்றும் காலை மாலை என்ற முதல் பாடலும் நேற்றைய தினம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பில்மிபீட் நேயர்களுக்காக பேசிய கிருத்திகா, பேப்பர் ராக்கெட் கதை, படத்திற்கு செட் ஆகாததாலேயே தான் இதை தொடராக உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.

சந்தோஷமான மனநிலை
இந்த தொடர் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கதைக்கு தொடர்புள்ள காட்சியாகவே பேப்பர் ராக்கெட் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தை தனத்துடன் அதிகமாக பயணங்களை மேற்கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர் முழுவதுமே சந்தோஷமான மனநிலையுடன் சூட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பீஸ்ட் FDFS கண்டிப்பாக பார்ப்பேன்
தொடர்ந்து பேசிய அவர், விஜய் படத்தின் FDFSவை நண்பர்களுடன் இணைந்து பார்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். விஜய் மற்றும் நெல்சன் இருவருக்கும் காமெடி சென்ஸ் அதிகமாக உள்ள நிலையில், இருவரும் இணைந்துள்ள பீஸ்ட் படம் கண்டிப்பாக மிகப்பெரிய சக்சஸ் கொடுக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











