டாய்லெட் ஸ்டோரி சொன்ன கிருத்திகா உதயநிதி.. குவியும் பாராட்டுக்கள்.. எதற்காக தெரியுமா?
சென்னை: பலரும் பேசத் தயங்கும் விஷயத்தில் மக்கள் நலனுக்காக துணிந்து தனது கருத்தை முன் வைத்து இருக்கும் கிருத்திகா உதயநிதியின் வீடியோ டிரெண்டாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலினின் மனைவி மற்றும் இயக்குநர் கிருத்திகா உதயநிதி தன்னுடைய டாய்லெட் ஸ்டோரியை சொல்லி இந்த தேவையான முன்னெடுப்பை எடுத்து வைத்துள்ளார்.
சுகாதாரம் என்பது அனைவருக்கும் எந்தளவுக்கு முக்கியமானது என்பதை தனது சொந்த அனுபவங்களுடன் பகிர்ந்துள்ள கிருத்திகா உதயநிதியை ரசிகர்களும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இயக்குநர் கிருத்திகா உதயநிதி
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மருமகள், உதயநிதி ஸ்டாலினின் மனைவி என்ற அடையாளங்களுக்குள் மட்டும் அடங்கி விடாது தனக்கென தனி அடையாளத்தை கொண்டு இயக்குநர் உதயநிதியாக கெத்து காட்டி வருகிறார் கிருத்திகா உதயநிதி. மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.

புதிய படம்
வணக்கம் சென்னை கமர்ஷியலாக ஹிட் அடித்த நிலையில், விஜய் ஆண்டனியை வைத்து காளி எனும் படத்தை இயக்கினார். அதன் பிறகு தற்போது காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தை இயக்கி வருகிறார் கிருத்திகா உதயநிதி. சினிமாவை தாண்டி பல சமூக பணிகளையும் செய்து வருகிறார்.

டாய்லெட் ஸ்டோரி
இந்நிலையில், குட்டி ஸ்டோரி போல தனது டாய்லெட் ஸ்டோரியை வெளிப்படையாக பேசி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகிறார். அதில், தனக்கு டாய்லெட் கிடைக்காமல் போன அனுபவங்களையும் ஷேர் செய்துள்ளார் கிருத்திகா உதயநிதி.
மாற்ற வேண்டும்
இந்த அவல நிலையை மாற்றும் முனைப்பாக மேப்பதான் எனும் நிகழ்வு ஏப்ரல் 2 மற்றும் 3ம் தேதி சென்னை சாந்தோம் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. சென்னை கார்ப்பரேஷன், ரீசைக்கிள் பின் உள்ளிட்டவைகள் இணைந்து நடத்தக் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், மீண்டும் பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளாக மாற்ற இந்த முயற்சி உதவும் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











