பிரபல சின்னத்திரை வில்லியோட மகனா இவர்... ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

சென்னை : சமீபத்தில் வெளியான முதலும் நீ முடிவும் நீ படத்தில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தார் கிஷேன் தாஸ். சூப்பர் ஹிட்டடித்துள்ள இந்தப் படத்தின் நடித்துள்ளதன்மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவரது அம்மா சின்னத்திரையின் பிரபல வில்லி என்ற தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Recommended Video

Mudhal nee Mudivum Nee | Kishen Das | Meetha | 1999 காலத்து காதல் கதை | Filmibeat Tamil

நடிகர் கிஷேன் தாஸ்

நடிகர் கிஷேன் தாஸ்

நடிகர் கிஷேன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் முதலும் நீ முடிவும் நீ. இந்தப் படம் இவருக்கு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது. இளம் நடிகரான கிஷேன் தாஸ் ரசிகர்களை இந்தப் படம் மூலம் வெகுவாக கவர்ந்துள்ளார்.

பன்முக திறமை

பன்முக திறமை

முன்னதாக கிஷேன் தாஸ் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி யூடியூப் சேனல் மூலம் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடையே முன்னதாக பிரபலமானவர். ஸ்டாண்டப் காமெடியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

குறும்பட இயக்குநர்

குறும்பட இயக்குநர்

சினிமாவில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பறந்து செல்லவா என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது முதலும் நீ முடிவும் நீ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ள கிஷேன் தாசுக்கு, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம்.

பிருந்தா தாசின் மகன்

பிருந்தா தாசின் மகன்

இதனிடையே சின்னத்திரை பிரபலம் பிருந்தா தாஸ், கிஷேன் தாசின் அம்மா என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவர் பிரபல ஆனந்தம் தொடரின் சைலண்ட் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். மேலும் விஜய் டிவியின் நடன நிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்சி எல்லாவற்றிலும் கலந்து கொண்டு சிறப்பான பெயரை பெற்றிருந்தார்.

அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து

அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து

தொடர்ந்து ஹாய் டா என்ற படத்தையும் இயக்கிய பிருந்தா தாஸ், தற்போது சினிமாவில் இருந்து விலகி கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிறப்புகளை குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் கிஷேன் தாஸ்.

சாய்ந்துக் கொள்ள தோளாக இருப்பவர்

சாய்ந்துக் கொள்ள தோளாக இருப்பவர்

இதையடுத்தே பிருந்தா தாஸ், கிஷேன் தாசின் அம்மா என்பது தற்போது வெளியாகியுள்ளது. தன்னுடைய அம்மா தன்னுடைய வாழ்க்கையில் சாய்ந்துக் கொள்ள தோளாகவும் தனக்கு பின்னால் இருந்து ஊக்குவித்த வகையில் தனக்கு எல்லாமாகவும் இருந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X