மாதம்பட்டி ரங்கராஜின் உம்மா வீடியோ.. பிரபலம் போட்டு இந்த கலாய் கலாய்க்கிறாரே..

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசல்ட்டா பிரச்னையானது கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று ஜாய் கிரிசல்ட்டாவும், தன்னை பிளாக்மெயில் செய்கிறார் என்று மாதம்பட்டி ரங்கராஜும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகிறார்கள். இப்படி இருக்கையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய தனிப்பட்ட வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார் ஜாய். இந்நிலையில் இன்று அதாவது, நவம்பர் 6ஆம் தேதி பகிர்ந்துள்ள வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதாவது, நேற்றைய தினம் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜாய் கிரிசல்ட்டா தன்னை பிளாக்மெயில் செய்வதாகவும், ஜாய்ன் கிரிசல்ட்டாவுக்கு பிறந்துள்ள குழந்தையின் அப்பா நான் தான் என்று டி.என்.ஏ பரிசோதனையில் உறுதியானால், அந்த குழந்தையின் பாராமரிப்பு செலவுகளை தானே ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார். இவரது இந்த அறிக்கைக்கு ஜாய் கிரிசல்ட்டா கண்ணீருடன் வெளியிட்ட வீடியோவில், நான் பிளாக்மெயில் செய்ததாக கூறும் மாதம்பட்டி ரங்கராஜ், விசாரணையின் போது ஏன் அதைக் குறிப்பிடவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

kishore k swamy Trolls Madhampatty Rangaraj After Joy Crizildaa Shares Personal Video

நான் பிளாக்மெயில் செய்துதான் வீடியோக்கள் அனுப்ப வைத்தேன், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன் என்றால், எங்களுக்கு இடையில் நடைபெற்ற உடலுறவையும் பிளாக்மெயில் என்று சொல்ல வேண்டியதுதானே? அதை மட்டும் ஏன் சொல்லவில்லை, ஏன் என்றால் அது அவருக்கு தேவைப்பட்டுள்ளது என்று தெரிவித்து கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

உம்மா வீடியோ: இந்நிலையில், மாதம்பட்டி தனக்கு ஏற்கனவே அனுப்பிய தனிப்பட்ட வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார் ஜாய் கிரிசல்ட்டா. அதில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசல்ட்டாதான் மிகவும் அழகு என்று காதல் ததும்ப ததும்ப கூறுகிறார். மேலும் அந்த வீடியோவில் பல லவ் யூக்களும் மிஸ்யூக்களையும் கூறுகிறார். இறுதியாக கேமராவிற்கு முத்தத்தை கொடுத்து முடிக்கிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்த கிரிசல்ட்டாவோ, " இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! Mr husband மாதம்பட்டி ரங்கராஜ்?. மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க - இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா? கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி " என்று பதிவிட்டுள்ளர்.

kishore k swamy Trolls Madhampatty Rangaraj After Joy Crizildaa Shares Personal Video

செம கலாய்: இவரது இந்த போஸ்ட்க்கு பிரபல அரசியல் விமர்சகர் கிஷோர் கே. சுவாமி, " நம்ம லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் தலைமையில் ஜாய் , மாதம்பட்டி , ஸ்ருதி பஞ்சாயத்து வைச்சா செமையா போகும். நடுவுல பீட்ரூட் அல்வா செய்வது எப்படின்னு குக் வித் காவாலின்னு ஷோவும் பண்ணலாம்" என்று கமெண்ட் போட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் இணையவாசிகள் பலரும் மாதம்பட்டி ரங்கராஜை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். குறிப்பாக, " எல்லோரும் லவ் மூட்ல பேசுறது தான். கமிட்மெண்ட்டுன்னு வரவும் ஓடுறாரு, கண்ண பார்த்தா போதைல பேசுனா மாதிரி இருக்கு, மிரட்டி லவ் டார்ச்சர் பண்ணி இருக்கீங்க" என்று எல்லாம் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X