இளமியில் பழந்தமிழ் பேசும் கிஷோர்!
கிஷோர்... நடிப்பை எப்படி பக்குவமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தேர்ந்த கலைஞர். வாய்ப்புகள் வருகிறதே என்று ஒப்புக் கொள்ளாமல், தனக்காகப் பொருந்தி வரும் கதைகளைத் தேர்வு செய்து நடிப்பவர்.
சொந்த மொழி தமிழ் இல்லாவிட்டாலும், வட்டார வழக்குத் தமிழ் அனைத்தையும் சிரத்தையெடுத்து கற்றுக் கொண்டு பேசி அசத்துபவர்.

இளமி
இப்போது இளமி என்றொரு படத்தில் நடிக்கிறார் கிஷோர். இந்தப் படத்துக்காக ஒரு சிறப்புப் பயிற்சி எடுத்துள்ளாராம் கிஷோர். அது என்ன தெரியுமா?

பழந்தமிழ்
பதினெட்டாம் நூற்றாண்டில் பேசப்பட்டது போன்ற தமிழைப் பேசப் போகிறாராம். அதற்காகவே இந்த சிறப்புப் பயிற்சி.

எப்படி இருக்கும்?
சரி, பதினெட்டாம் நூற்றாண்டுத் தமிழ் உச்சரிப்பு எப்படி இருக்கும்... அதைப் பார்த்தவர், கேட்டவர் யாரும் உண்டா?

ஆய்வு
நேரடி சாட்சிகள் இல்லை என்றாலும், சரித்திரப் பூர்வமாக ஆய்வு செய்து, அன்றைய தமிழ் இப்படித்தான் இருந்திருக்கும் என்று ஒரு ஒலிவடிவம் கொடுத்துள்ளார்களாம். அதைத்தான் கிஷோர் பேசப் போகிறார்.
இந்தப் படத்துக்காக அவர் குதிரையேற்றப் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











