Kisi Ka Bhai Kisi Ki Jaan.. செம ஆட்டம் போட்ட ராம்சரண், சல்மான் கான்.. வெளியானது வீடியோ
மும்பை: Veeram hindi Remake(வீரம் ஹிந்தி ரீமேக்) கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் இடம்பெற்றிருக்கும் எண்ட்டம்மா பாடலுக்கு சல்மான் கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோருடன் ராம்சரணும் நடனம் ஆடியிருக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது.
அஜித்தும், சிறுத்தை சிவாவும் இணைந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்கள் பணியாற்றியுள்ளனர். இதில் விவேகம் தவிர மற்ற மூன்று படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வீரம் அஜித், சிவா
அஜித் மங்காத்தா படத்திற்கு படம் செய்த ஆரம்பம், பில்லா 2 ஆகிய படங்கள் சிட்டியில் நடப்பது போலவும், துப்பாக்கிச் சண்டைகள் அதிகம் இருக்கும்படியும் அமைந்திருந்தன. இது ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தியது. அஜித் உடனடியாக ட்ராக்கை மாற்ற வேண்டும் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. இதனை உணர்ந்துகொண்ட அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்தார்.

கோலிவுட்டில் ப்ளாக்பஸ்டரான வீரம்
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானது வீரம் படம். இந்தப் படத்தில் அஜித்துடன் தமன்னா, சந்தானம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் செண்ட்டிமெண்ட்டாகவும், குடும்பங்களை கவரும் விதமாகவும் இருந்ததால் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதனையடுத்து தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் மூன்று படங்கள் இணைந்து பணியாற்றினார் அஜித்.

ஹிந்தியில் ரீமேக்காகும் வீரம்
கோலிவுட்டில் ஹிட்டான வீரம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'கட்டமராயுடு' என்ற பெயரிலும், கன்னடத்தில் தர்ஷன் நடிப்பில் 'ஒடியா' என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியில் ரீமேக்காகியிருக்கிறது வீரம் திரைப்படம். அப்படத்துக்கு கிசி கா பாய் கிசி கி ஜான் என பெயரிடப்பட்டுள்ளது.

வீரம் ரீமேக்கில் நடிக்கும் சல்மான் கான்
ஹிந்தியில் ரீமேக்காகும் வீரம் படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கிறார். பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் பின்னணி இசையை கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் அமைக்க பாடல்களுக்கு ஹிமேஷ் ரேஷ்மயா, தேவிஸ்ரீ பிரசாத், ரவி பஸ்ரூ, சுக்பீர் சிங், பாயல் தேவ், அமல் மாலிக் என 6 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

நாளை வெளியாகும் முதல் பாடல்
கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் இடம்பெற்றிருக்கும் நையோ லக்டா என்ற பாடல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து கடந்த மார்ச் 31ஆம் தேதி புட்டகம்மா என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையே இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கானுடன் ராம் சரண் போட்ட ஆட்டம்
இந்நிலையில் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் இடம்பெற்றிருக்கும் என்ட்டம்மா என்ற பாடலுக்கு சல்மான் கான், வெங்கடேஷ் மற்றும் பூஜா ஹெக்டேவுடன் தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்சரணும் நடனமாடியிருக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இந்தப் பாடல் ரசிகர்களின் வெகுவான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி #Poojahegde ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











