»   »  மீண்டும் காதலில் விழுந்த 'காத்தாடி' நடிகை

மீண்டும் காதலில் விழுந்த 'காத்தாடி' நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காத்தாடி நடிகை மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.

போலீஸ் படம் ,நம்பர் படம் என தொடர்ந்து வெற்றிகளைக் கொடுத்து தமிழின் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் காத்தாடி நடிகை.

Kite Actress Fall in Love

இந்நிலையில் நடிகையின் திடீர் ஓய்வுக்கு காதல்தான் காரணம். காதலருடன் நேரம் செலவிடவே நடிகை இந்த முடிவை எடுத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன் புத்த நடிகரும், நடிகையும் காதல் வானில் சிறகடித்துப் பறந்து வந்தனர்.திருமணம் வரை சென்ற இந்தக்காதல் திடீரென்று முறிந்து போனது.

தற்போது நடிகை மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக கூறுகின்றனர். இதனால் தான் நடிகை சிலகாலம் நடிப்புக்கு முழுக்குப் போட்டிருக்கிறாராம்.

நான் சிங்கிளாக இருக்கிறேன் என்று சொன்னேனா? என சமீபத்திய பேட்டியில் நடிகை எரிந்து விழுந்தது, சிலகாலம் நடிப்பைத் தள்ளி வைத்தது போன்றவற்றிற்கு எல்லாம் பின்னணிக் காரணம் காதல்தான் என்கின்றனர்.

மற்றொருபுறம் சிகிச்சைக்காகத் தான் நடிகை சிலகாலம் நடிப்பைத் தள்ளி வைத்தார் என்றும் கூறப்படுகிறது.

English summary
Sources said Kite Actress Again Fall in Love.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil