பல நடிகர்கள் துரத்தி துரத்தி காதலித்தார்கள்... நடிகை அஸ்வினி சொன்ன அந்த விஷயம்!
சென்னை: பாரதி ராஜா இயக்கிய கிழக்கு சீமையிலே படத்தில் ராதிகாவின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் நடிகை அஸ்வினி. தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், தனது சினிமா வாழ்க்கை குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஆத்தங்கரை மரமே அரச மர இலையே என விக்னேஷுடன் டூயட் பாடிய பேச்சியை யாரும் மறந்து இருக்க முடியாதது. பல திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள அஸ்வினி திருமணத்திற்கு பின் சினிமாவில் காணாமல் போய்விட்டார். மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கும் இவர், சுழல் 2 வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அந்த பேட்டியில், நான் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது பல நடிகர்கள் என்னை காதலித்தார்கள். பல நடிகர்கள் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அம்மாவிடம் வந்து பொண்ணு கேட்கும் அளவிற்கு கூட சென்றார்கள். ஆனால், அப்போது அந்த திருமணத்திற்கு நான் தயாரானவளாக இல்லை.

பல நடிகர்கள் காதலித்தார்கள்: என்னுடைய கவனம் எல்லாம் சினிமாவில் நன்றாக நடிக்க வேண்டும், சொந்த வீடு வாங்க வேண்டும், அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. இந்த விஷயத்தில் நான் தெளிவாக இருந்ததால் காதலைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அதற்குக்காரணம், அம்மா அப்பா திருமணம் செய்து கொண்டு பல பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் அனுப்பவித்தார்கள். இதனால் நான் திருமண விஷயத்தில் சரியான தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என்று யாரிடமும் என்னுடைய காதலை சொன்னாலும் அவர்களுக்கு நான் நோ என்று சொல்லிவிட்டேன்.
காதல் அழகானது: ஆனால் என்னுடைய திருமணமும் ஒரு காதல் திருமணம் தான். சினிமாவில் இல்லாத ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். காதல் என்பது என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பங்காக இருந்தது. நான் எப்போதும் அமைதியாகவே இருப்பேன். இதனால்,துருதுருப்பான, சுறுசுறுப்பான ஆளை பார்த்ததும் அவர் மீது எனக்கு காதல் வந்தது. இதனால் அவரையை திருமணம் செய்து கொண்டேன். என்னதான் காதல் இருந்தாலும் அந்த காதல் திருமண வாழ்க்கையில் நீடித்து இருக்க வேண்டும் என்றால் அதற்காக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பது மிக அவசியம். என்னத்தான் கணவன் மனைவியாக இருந்தாலும், அவர் அவர்கள் அவருக்கான சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் என நடிகை அஸ்வினி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











