கிழக்குச் சீமையிலே நடிகை அஸ்வினியிடம் பாலியல் அத்துமீறல்.. இயக்குநரின் காமவெறி.. யார் அந்த இயக்குநர்?

சென்னை: தமிழ் சினிமாவில் பல விஷயங்கள் மாறிவிட்டாலும் அன்று முதல் இன்று வரை மாறாத விஷயமாக இருப்பது, அட்ஜெஸ்ட்மெண்ட். இந்த ஒற்றை வார்த்தைக்கு ஓ.கே சொல்பவர்களை தங்களது படத்தின் கதாநாயகியாக நடிக்க வைக்க தயாராக இருக்கும் நடிகர்களும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாரதிராஜா இயக்கத்தில் உருவான கிழக்குச் சீமையிலே படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை, அஸ்வினி. அவர் தனக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

தங்களது விருப்பத்திற்கு இசைந்து கொடுக்கும் நடிகைகளை தங்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்கிறேன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறேன் எனக் கூறும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஒருபுறம் இருந்தால், பீச் ஹவுஸுக்கு அந்த நடிகை வருவாங்க என்றால் வரச்சொல்லுங்க ஒரு மீட்டிங் முடித்த பின்னர் படத்தில் கமிட் செய்து கொள்ளலாம் எனக் கூறும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Kizhakku Cheemayile Actress Ashwini Actress Abuse

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் பல முன்னணி நடிகர்களின், இயக்குநர்களின், தயாரிப்பாளர்களின் முகத்திரை கிழிந்தது. அப்படி இருக்கும்போது பல நடிகைகள் இன்னும் உண்மைகளைச் சொல்லாமல் உள்ளார்கள். அதனால், பல முன்னணி பிரபலங்கள் யோக்கியர்கள் வேடத்தில் சுற்றிக் கொண்டு உள்ளார்கள். அப்படிச் சொல்லும் நடிகைகள் பலரும், பெரும்பாலும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து கூறும்போது, தங்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது யார் எனக் கூறுவது இல்லை.

இயக்குநர்: இப்படியான நிலையில் கிழக்குச் சீமையிலே படத்தில் நடித்த நடிகையான அஸ்வினி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பேசினார். அதாவது, " நான் எப்போதும் எனது அம்மாவுடன் தான் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வேன். சில காரணங்களால் அன்றைய தினம் என் அம்மாவால் படப்பிடிப்பு தளத்திற்கு வரமுடியவில்லை. இதனால் படப்பிடிப்புக்கு போகலாமா வேண்டாமா என நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் மேக்கப் போடுவதற்கு பெண் கலைஞர் இருந்ததால், எனது அம்மா என்னை படப்பிடிப்புக்கு போகச் சொன்னார்.

அத்துமீறல்: எனக்கு அப்போது ரொம்பவும் சின்ன வயது என்பதால், என்னால் எதையும் வேறு ஒரு கோணத்தில் யோசிக்கும் தன்மை இல்லாமல் இருந்தேன். படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றதும், இயக்குநர் என்னை மேலே கூப்பிடுகிறார் எனக் கூறினார்கள். அதனால் மேலே சென்றேன். மேலே போனால் யாருமே இல்லை. ஒரு அறையில் இருந்து இயக்குநரின் குரல் கேட்டது. அவர் என்னை உள்ளே கூப்பிட்டார். நானும் எதுவும் யோசிக்காமல் சென்றுவிட்டேன். உள்ளே சென்ற பின்னர் அவர் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். நான் இப்படி நடக்கும் என கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. அங்கிருந்து கீழே வந்த நான், உடனே வீட்டுக்கு வந்துவிட்டேன்.

தற்கொலை முயற்சி: நடந்ததை அம்மாவிடம் கூறினேன். அம்மா மனமுடைந்து அழுதார். இது மட்டும் இல்லாமல், எனக்கு அம்மாவிடம் இதை கூறி அவரைக் காயப்படுத்தி விட்டோமே என்ற எண்ணம் என்னை ரொம்பவும் கஷ்டப்படுத்தியது. தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட யோசித்தேன்" எனக் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் எந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்றது, யார் இவ்வாறு செய்தார் என பெயரைக் குறிப்பிடவில்லை. மேலும் அஸ்வினியை யார் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Read more about: அஸ்வினி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X