‘ஆத்தங்கர மரமே’ பேச்சியா இது.. நம்பவே முடியலயே.. என்னா ஸ்டைலா இருக்காங்க!

சென்னை: கிழக்கு சீமையிலே படத்தில் ஆத்தங்கர மரமே என்ற பாடலுக்கு தழைய தழைய புடவை கட்டி ஆட்டம் போட்ட பேச்சியம்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

மலையாள நடிகையான அஸ்வினி தனது பள்ளி இறுதியாண்டு படிக்கும் போதே, மலையாளப் பத்திரிக்கைக்காக, தனது வகுப்பு தோழர்களுடன் இணைந்து மாடலிங் செய்தார். அந்தப் பத்திரிகையைப் பார்த்த இயக்குநர் பாரதிராஜா , புது நெல்லு புது நாத்து படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பளித்தார். புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமான இவர், தமிழ் ரசிகர்களுக்காக தனது பெயரை ருத்ரா என்று மாற்றி வைத்துக்கொண்டார். அந்த படத்தில் சுகன்யா, நெப்போலியனுடன் இவர் இணைந்து நடித்தார்.

kizhakku cheemayile movie famous song Athankarai maramey actress rudra recent photos

கிழக்கு சீமையிலே: இந்த படத்தைதொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் கொடுத்த கிழக்கு சீமையிலே படத்தில் நடித்தார். இந்த படத்தில் விஜயகுமார், ராதிகா, நெப்போலியன், விக்னேஷ், பாண்டியன் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நெப்போலியன் மற்றும் ராதிகாவின் மகளாக ருத்ரா, பேச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் பாசமலர் படத்திற்கே சவால் விடும் அளவிற்கு இந்த படத்தில் அண்ணன் தங்கை பாசம் அழுத்தமாக சொல்லப்பட்டு இருக்கும்.

kizhakku cheemayile movie famous song Athankarai maramey actress rudra recent photos

ஆத்தங்கர மரமே: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன. குறிப்பாக இந்த படத்தில் வரும் ஆத்தங்கர மரமே.. அரசமர இலையே.. ஆலமரக் கிளையே..அதிலுறங்கும் கிளியே பாடலை அன்றைய இளசுகளுக்கு பிடித்துப்போனது. அந்த பாடலில் பின் கொசுவம் வைத்து.. கனுக்கால் தெரியம் படி.. ஆடி ஓடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ருத்ரா. அந்த பாடலில் வரும் மாமனே உன்ன காணாம வரியில் க்யூட்டான எக்பிரசன் கொடுத்து மொத்த இளசுகளையும் ஆப் ஆக்கிவிட்டார் ருத்ரா.

kizhakku cheemayile movie famous song Athankarai maramey actress rudra recent photos

சிங்கப்பூரில் செட்டில்: கிழக்கு சீமையிலே படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அஞ்சல் பெட்டி எண் 27, துருவம், ராமன் ஆப்துல்லா, பொன்னுதாயி, முதல்பயணம் என இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும், ஆத்தங்கர மரமே... பாடல் ஹிட் அளவிற்கு இவரால் புகழை தொடமுடியவில்லை. தமிழ், மலையாளம் என படு பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ருத்ரா. சிங்கப்பூர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் செட்டிலானார். தற்போது இவர சிங்கப்பூர் தொடர் மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார்.

பேச்சியம்மாவா இது நம்பவே முடியலையே: எழுத்தாளர் அலமேலு மங்கை, எஞ்சலி காலனி போன்ற தமிழ் குறும்படங்களில் நடித்து வரும் ருத்ரா, இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்துக்கொண்டு, அவ்வப்போது புது புது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அண்மையில் இவரின் போட்டோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து , ஆத்தங்கர மரமே பாடல் புகழ் பேச்சியம்மாவா இது நம்பவே முடியலையே, என்னம்மா ஸ்டைலா இருக்காங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X