தர்பார் ’சும்மா கிழி’ பாட்டுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள ‘கிழி கிழி’ ஆல்பம் பாடல்!
சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சும்மா கிழி' பாடல் நேற்று முன் தினம் வெளியானது.
டிவோ மியூசிக்கில் 'சும்மா கிழி' லிரிக் வீடியோ ரிலீசான நிலையில், 24 மணி நேரத்தில் 'சும்மா கிழி' பாடல் 8 மில்லியன் வியூஸ்களை கடந்து தென்னிந்தியாவிலேயே அதிக வியூஸ்களை பெற்ற முதல் பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில், சும்மா கிழி பாட்டுக்கு கூடவே செந்தில் ராஜன் என்பவரின் 'கிழி கிழி' என்ற தமிழ் ஆல்பம் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டி மீடியா யூடியூப் சேனலில் 'கிழி கிழி' பாடலை வெளியிட்டுள்ள செந்தில் ராஜன், தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'சும்மா கிழி' பல சாதனைகளை கடந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலில் அனிருத் இசையில், ரஜினியின் சிரிப்பில் வெளியாகியுள்ள சும்மா கிழி பாடல் 1 கோடி பார்வைகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது.
விஜய் வெர்ஷன், அஜித் வெர்ஷன், தோனி வெர்ஷன் என சும்மா கிழி பாடல் பல வெர்ஷன்களாக எடிட் செய்து வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இளைஞர்கள் அன்றாடம் வாழ்வில் படும் கஷ்டங்களை கிழித்து தள்ள வேண்டும் என்ற வரிகளில் வெளியாகியுள்ள 'கிழி கிழி' பாடலுக்கும் ரஜினி ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











